•10:01 PM
என் சகதோழி - என்னை வா நாயே, போ நாயே என கூப்பிடுவா, ஒரு நாள் - அவள் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருக்கும் போது - வீட்டில் உள்ள அனைவரும் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர், தர்மசங்கடமாக திரு திருன்னு முழித்தபோது எனக்கு கிடைத்த பதில் -
நீ அதிகமா உபயோகிக்கும் வார்த்தை 'வாவ்' - உன்னை பற்றி வீட்டில் பேசும்போது ஒருநாள் 'அந்த நாய்' என்று சொல்லிவிட்டேன் - அம்மா அதற்காக கடிந்துகொன்டார்கள் - அவரை சமாதானபடுத்த நான் கூறியது 'அவன் எப்போதும் 'வாவ்', 'வாவ்' னு நாய் (குட்டி - எனக்காக அங்கு சேர்க்கபட்டிருந்தது) மாதிரி சொல்லுவான், அதை இங்கு - நீ நிரூபித்து பேசியதால் எங்களால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்று.
அன்று முதல் குரைப்பதை குறைத்துக்கொண்டேன் - எனக்கு பின்னூட்டமிட்ட 'மது' வின் இடுகையில் இந்த 'வாவ்' பார்த்தபோது - நினைவில் என் நிலையை நினைத்து கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துவிட்டேன்.
நன்றி மது.

33 கருத்துகள்:
First of all, நீங்க என்ன "வா நாயே போ நாயே" அப்பிடின்னு கூப்பிடாம இருந்தா சரி :) Hehe, ஒரு Safety காக சொன்னேன்!
நீங்க இன்னும் வாவ் என்று சொல்வதுண்டோ? I bet you would have stopped by then!
சரி என்னதான் "அட என்னை நாய் என்பது போல உள்ளதே" என்று ஒரு எண்ணம் முதலில் வாசிக்கும் போது சட்டென தோன்றினாலும், பின்பு, என்னுடைய பின்னோட்டத்தின் பலனாக ஒரு பதிவு...என்று சந்தோஷப்பட்டேன் :)
LOL..(இதைகூட லொள் -நாய் குறைகிறதோ என்று ஒரு பதிவு எழுதி விடாதிங்க :)It means Laughing out Loud. Just kidding.
"வா நாயே...போ நாயே"சூப்பரோ சூப்பர்.நானும் சிலசமயங்களில் வாவ் சொல்வதுண்டு.அப்பாடி இனிச் சொல்லவே மாட்டேனே.அதுவும் இரவீயின் பதிவில் இல்லவே இல்லை.
என்றாலும் யார் அந்த நாய்க்குட்டிச் சிநேகிதி.என்னதான் இரவீ வாவ் என்று சொன்னாலும் நாய்க்குட்டி என்று சொன்னதை சுவிஸ் ல் இருந்துகொண்டு நான்...நான் ஹேமா வன்மையாகக் கண்டிக்கிறேன்.
என்றாலும் அருமையான நகைச்சுவையோடு கூடிய ஞாபகப் பதிவு.வா...வ்
//Mathu said...
First of all, நீங்க என்ன "வா நாயே போ நாயே" அப்பிடின்னு கூப்பிடாம இருந்தா சரி :) Hehe, ஒரு Safety காக சொன்னேன்!//
என் Safetyய - பற்றிய நினைவு இருக்கும் வரை கண்டிப்பா அப்படி கூப்பிட மாட்டேன்.
//நீங்க இன்னும் வாவ் என்று சொல்வதுண்டோ? I bet you would have stopped by then!//
நான் உங்க பந்தயத்துக்கு வரல :(
//"அட என்னை நாய் என்பது போல உள்ளதே" என்று ஒரு எண்ணம் முதலில் வாசிக்கும் போது சட்டென தோன்றினாலும், பின்பு, என்னுடைய பின்னோட்டத்தின் பலனாக ஒரு பதிவு...என்று சந்தோஷப்பட்டேன் :)//
அட கூட்டணி கிடைக்குமா - என்று ஒரு எண்ணம் முதலில் பின்னூட்டம் வாசிக்கும் போது, பின்பு பிளந்தவாயை மூடிக்கொண்டேன்.
//LOL..(இதைகூட லொள் -நாய் குறைகிறதோ என்று ஒரு பதிவு எழுதி விடாதிங்க :)It means Laughing out Loud. Just kidding.//
என்ன வச்சு காமடி கீமடி பண்ணலையே???
இரவீ, உங்களுக்கு... இப்படி ஒரு நல்ல "Pet" name இருக்கறதா சொல்லவே இல்லையே.
அடுத்தமுறை நாம மீட் பண்ணும்போது.. ஹைய்யோ..ஹைய்யோ... இப்போவே சிரிப்பா வருதே.
பேசாம "வாவ்" இரவீ 'னு கூப்பிடலாமா?
// ஹேமா, said...
என்றாலும் யார் அந்த நாய்க்குட்டிச் சிநேகிதி.என்னதான் இரவீ வாவ் என்று சொன்னாலும் நாய்க்குட்டி என்று சொன்னதை சுவிஸ் ல் இருந்துகொண்டு நான்...நான் ஹேமா வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
இதற்காகவாவது... ஒருமுறையாவது... - திருப்பூர் (தமிழ் நாடு) வாங்க - அங்க தான் அந்த குட்டி பிசாசு கல்யாணம் கட்டிக்கிட்டு போயிருக்கு.
//என்றாலும் அருமையான நகைச்சுவையோடு கூடிய ஞாபகப் பதிவு.வா...வ்//
நன்றிகள் பல ஹேமா,
அட வாவ எவ்வளவு அழகா சொல்லுறீங்க... அப்படி இழுத்து சொல்லனுமோ ...
இருந்தாலும் நான் சொல்ல மாட்டேன் - எதுக்கு வம்பு.
//இதற்காகவாவது... ஒருமுறையாவது... - திருப்பூர் (தமிழ் நாடு) வாங்க - அங்க தான் அந்த குட்டி பிசாசு கல்யாணம் கட்டிக்கிட்டு போயிருக்கு.//
எங்க ஊர்லதான் இருக்காங்களா. நம்பர் கொடுங்க.. உங்களைப் பத்தி வேற ஏதாவது தகவல் இருக்கான்னு கேட்கணும்.
//கணினி தேசம் said...
இரவீ, உங்களுக்கு... இப்படி ஒரு நல்ல "Pet" name இருக்கறதா சொல்லவே இல்லையே.
//
நானா தான் உளறிட்டனோ...
/கணினி தேசம் said...
அடுத்தமுறை நாம மீட் பண்ணும்போது.. ஹைய்யோ..ஹைய்யோ... இப்போவே சிரிப்பா வருதே.//
பேச்சு வார்த்தை - உடன்படிக்கை போன்ற உன்னதமான வழிகளை விடுத்து, தாக்குதலில் ஈடுபட கூடாது.
//கணினி தேசம் said...
பேசாம "வாவ்" இரவீ 'னு கூப்பிடலாமா?//
என் பதிவை "வாவ்" என்று பாராட்டியதற்கு நன்றி,
பேச்சு பேச்சா இருக்கணும்...
பதிவு பதிவா இருக்கணும்.
//"வா நாயே...போ நாயே"சூப்பரோ சூப்பர்.நானும் சிலசமயங்களில் வாவ் சொல்வதுண்டு.அப்பாடி இனிச் சொல்லவே மாட்டேனே.அதுவும் இரவீயின் பதிவில் இல்லவே இல்லை.
//
ஆஹா நான் பல சமயங்களில் வாவ் சொல்லுவேனே.. இனி இனி சொல்லவே மாட்டேன்
// கணினி தேசம் said...
//இதற்காகவாவது... ஒருமுறையாவது... - திருப்பூர் (தமிழ் நாடு) வாங்க - அங்க தான் அந்த குட்டி பிசாசு கல்யாணம் கட்டிக்கிட்டு போயிருக்கு.//
எங்க ஊர்லதான் இருக்காங்களா. நம்பர் கொடுங்க.. உங்களைப் பத்தி வேற ஏதாவது தகவல் இருக்கான்னு கேட்கணும்.
//
நானும் கேட்டுகிறேன்
//கணினி தேசம் said...
//இதற்காகவாவது... ஒருமுறையாவது... - திருப்பூர் (தமிழ் நாடு) வாங்க - அங்க தான் அந்த குட்டி பிசாசு கல்யாணம் கட்டிக்கிட்டு போயிருக்கு.//
எங்க ஊர்லதான் இருக்காங்களா. நம்பர் கொடுங்க.. உங்களைப் பத்தி வேற ஏதாவது தகவல் இருக்கான்னு கேட்கணும்.//
'வேலியில போற ஓணான' னு ஒரு மொழி உண்டு - உங்களுக்கு அது தெரியுமா ??? எனக்கு தெரியுமே.
// Ravee (இரவீ ) said...
//கணினி தேசம் said...
இரவீ, உங்களுக்கு... இப்படி ஒரு நல்ல "Pet" name இருக்கறதா சொல்லவே இல்லையே.
//
நானா தான் உளறிட்டனோ...
//
ரவீ தெளிவா இருக்கும் போது தான இதை எழுதினிங்க ???????
//PoornimaSaran said...
// கணினி தேசம் said...
//இதற்காகவாவது... ஒருமுறையாவது... - திருப்பூர் (தமிழ் நாடு) வாங்க - அங்க தான் அந்த குட்டி பிசாசு கல்யாணம் கட்டிக்கிட்டு போயிருக்கு.//
எங்க ஊர்லதான் இருக்காங்களா. நம்பர் கொடுங்க.. உங்களைப் பத்தி வேற ஏதாவது தகவல் இருக்கான்னு கேட்கணும்.
//
நானும் கேட்டுகிறேன்//
பூர்ணி,
பாவம் விடுங்க, சின்ன பொண்ணு - பொழச்சு போகட்டும்.
//PoornimaSaran said...
// Ravee (இரவீ ) said...
//கணினி தேசம் said...
இரவீ, உங்களுக்கு... இப்படி ஒரு நல்ல "Pet" name இருக்கறதா சொல்லவே இல்லையே.
//
நானா தான் உளறிட்டனோ...
//
ரவீ தெளிவா இருக்கும் போது தான இதை எழுதினிங்க ???????
//
பூர்ணி, அர தூக்கத்தில் எழுதிட்டேன்.
ஸ்ஸ்... அப்பாடா சமாளிச்சாச்சு .
//PoornimaSaran said...
//"வா நாயே...போ நாயே"சூப்பரோ சூப்பர்.நானும் சிலசமயங்களில் வாவ் சொல்வதுண்டு.அப்பாடி இனிச் சொல்லவே மாட்டேனே.அதுவும் இரவீயின் பதிவில் இல்லவே இல்லை.
//
ஆஹா நான் பல சமயங்களில் வாவ் சொல்லுவேனே.. இனி இனி சொல்லவே மாட்டேன்//
நீங்க பயப்பட தேவையில்லை என நினைக்கிறேன்,
என்ன மாதிரி, மிக கம்பீரமான - உச்ச ஸ்தாதி குரல் வலம் மிக்கவருக்கு மட்டுமே - இது சால பொருந்தும்.
தலைப்பே அசத்தல்...
உள்ளே போறேன் ...
\\என் சகதோழி - என்னை வா நாயே, போ நாயே என கூப்பிடுவா\\
அப்படியா ...
ஓ! அந்த “வாவ்”ஆ
ஆஹா ஆஹா
கிளம்பிட்டாங்கப்பா கிளம்பிட்டாங்கப்பா
//அதிரை ஜமால் said...
தலைப்பே அசத்தல்...
உள்ளே போறேன் ...
//
வாங்க - வந்தனம் - பூந்து விளையாடுங்க.
//அதிரை ஜமால் said...
\\என் சகதோழி - என்னை வா நாயே, போ நாயே என கூப்பிடுவா\\
அப்படியா ...//
ஆமாங்க - நான், என் கூட அவ்வளவு நெருக்கமா இருக்கானு நம்பி ... சரி உள்ளபோய் படிங்க.
//அதிரை ஜமால் said...
ஓ! அந்த “வாவ்”ஆ
ஆஹா ஆஹா
கிளம்பிட்டாங்கப்பா கிளம்பிட்டாங்கப்பா//
அந்த வார்த்தைய பத்தி மட்டும் கிளப்பாதீங்க,
என்ன ஏற்கனவே மக்கள் - கிழிச்சி - தொவச்சி காயவச்சிட்டாங்க.
வேணாம்.... வலிக்குது ...
//இரவீ வா....வ் சொல்றதுக்காவவே வரணும் தமிழ்நாட்டுக்கு நான்.//
வாங்க!! வாங்க!!! ... அந்த வார்த்தைய -சுவிஸ் ல் விட்டுட்டு வாங்க.
//ஹேமா,
என்ன கோபம், எதற்கு கோபம் ??? ஏன் இப்படி...
இத தான் 'தூக்கி தொப்புன்னு' போடுறதா சொல்லுவாங்களோ !!!
சரி - சரி,
நன்றிமிக்க என்னுடைய போனஜென்மத்தை கண்டறிந்த உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.//
இரவீ நிறையவே மனம் நொந்திருக்கிறீர்கள் போல இருக்கு.
என் மனமறிய நான் சத்தியமாக உங்களை இப்படித் தாக்கும் என்று நினைத்திருக்கவே இல்லை.நீங்கள் என்னைப் போன பிறப்பைச் சொல்லிக் கேலி பண்ணியிருந்தீர்கள்.அதை இந்தப் பதிவோடு தொடர்பு படுத்தி நானும் கேலிதான் பண்ணியிருந்தேன்.
ஓ...இந்தப் பதிவு இவ்வளவு நகைச்சுவையாக இருந்துவிட்டு இப்படி மனதையும் நோகடித்து விட்டதே என்னால்.தயவு செய்து உண்மையாகவே உங்கள் மனம் நொந்திருந்தால் இந்தப் பதிவிற்கு வருகின்ற எல்லோருக்கும் முன்னால் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.மன்னித்துக் கொள்ளுங்கள் திரும்பவும்.உங்கள் மனதை ஆறவிடுங்கள் தயவோடு.
என்றும் உங்கள்
அன்பான தோழி ஹேமா.
//வேணாம்.... வலிக்குது ...
//இரவீ வா....வ் சொல்றதுக்காவவே வரணும் தமிழ்நாட்டுக்கு நான்.//
வாங்க!! வாங்க!!! ... அந்த வார்த்தைய -சுவிஸ் ல் விட்டுட்டு வாங்க.//
இரவீ,உங்களை விட இப்போ எனக்குத்தான் வலி அதிகம்.இனிமேல் இப்படியான விளையாட்டே வேணாம்.
//ஹேமா said...
//ஹேமா,
என்ன கோபம், எதற்கு கோபம் ??? ஏன் இப்படி...
இத தான் 'தூக்கி தொப்புன்னு' போடுறதா சொல்லுவாங்களோ !!!
சரி - சரி,
நன்றிமிக்க என்னுடைய போனஜென்மத்தை கண்டறிந்த உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.//
இரவீ நிறையவே மனம் நொந்திருக்கிறீர்கள் போல இருக்கு.
என் மனமறிய நான் சத்தியமாக உங்களை இப்படித் தாக்கும் என்று நினைத்திருக்கவே இல்லை.நீங்கள் என்னைப் போன பிறப்பைச் சொல்லிக் கேலி பண்ணியிருந்தீர்கள்.அதை இந்தப் பதிவோடு தொடர்பு படுத்தி நானும் கேலிதான் பண்ணியிருந்தேன்.
ஓ...இந்தப் பதிவு இவ்வளவு நகைச்சுவையாக இருந்துவிட்டு இப்படி மனதையும் நோகடித்து விட்டதே என்னால்.தயவு செய்து உண்மையாகவே உங்கள் மனம் நொந்திருந்தால் இந்தப் பதிவிற்கு வருகின்ற எல்லோருக்கும் முன்னால் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.மன்னித்துக் கொள்ளுங்கள் திரும்பவும்.உங்கள் மனதை ஆறவிடுங்கள் தயவோடு.
என்றும் உங்கள்
அன்பான தோழி ஹேமா.
//
ஹேமா, ஆறு - ஏழு பேரு (என் நண்பர்கள் ) சுத்தி உட்கார்ந்து - மணிகணக்கில் - நாள் கணக்கில் என்னை கேலி செய்வதுண்டு (அது சுழற்சி முறையில் எங்கள் அனைவருக்கும் வரும் - அதிகமாக எனக்குதான்), அதுக்கே கவலை பட்டது கிடையாது நான்... உங்க பாசமான வரிகள் ஒரு போதும் என்னை மனம் நோக செய்யாது ...
உண்மைய சொல்லபோனா - இந்த கிண்டலும் கேலியும் என் மனதிற்கு மருந்தாகவே நினைத்திருக்கின்றேன்.
உங்களின் படைப்புகள் "வீரம் - கோபம் - விவேகம்" நிறைந்ததாய் இருப்பதாக கருதியே - இம் மூன்றையும் ஒரு சொல்லில் குறிக்கும் "ஜான்சிராணி" யை உதாரணமாக நினைத்து பதிவிட்டிருந்தேன், அதை கண்டிப்பாக கேலியாக என்ன வேண்டாம்.
நீங்க என் பதிவில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டியபோது, உங்களின் இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு தான் சொன்னேன் - காரணம் "புகழ்பவர்களை விட - குறையை சுட்டிகாண்பிப்பவர்கள், நம் வளர்ச்சியில் அதிக நாட்டம் உள்ளவர்கள்" என்ற என் எண்ணமே.
அதனால - கொஞ்சமும் மன வருத்தம் இல்லாமல், கேலி செய்யலாம் , கிண்டல் செய்யலாம் , சுட்டி காட்டலாம் - சரியா.
அன்பு நண்பன்,
இரவி.
இரவீ,கோவம் போயாச்சா!மிக்க நன்றி.என்னதான் நீங்கள் சொன்னாலும் உண்மையிலேயே நீங்கள் மன வேதனைப்பட்ட வரிகள்.இனிக் கவனமாகத் தொடர்ந்து கொள்வேன்.
ஹேமா,
வேணாம் வலிக்குது ... அழுதுடுவேன் ... என்பது கூட வடிவேலுவின் நகைசுவை வரிகள்... சொன்னா நம்புங்க...
//கோவம் போயாச்சா!மிக்க நன்றி.//
இருந்தா தான போகறதுக்கு...
//என்னதான் நீங்கள் சொன்னாலும் உண்மையிலேயே நீங்கள் மன வேதனைப்பட்ட வரிகள்.இனிக் கவனமாகத் தொடர்ந்து கொள்வேன்.//
என்னதான் நீங்கள் சொன்னாலும் உண்மையிலேயே நான் மனவேதனை படமாட்டேன்.
ada.......wow nu sonna doggy nu koopiduvangla:((
nalla vela sonenga Ravee...will cut short my wows hereafter:)))
//Divya said...
ada.......wow nu sonna doggy nu koopiduvangla
nalla vela sonenga Ravee...will cut short my wows hereafter)//
பூர்ணிமாக்கு சொன்னது இன்னொருமுறை திவ்யாவுக்காக ...
நீங்க பயப்பட தேவையில்லை ....
என்ன மாதிரி, மிக கம்பீரமான - உச்ச ஸ்தாதி குரல் வலம் மிக்கவருக்கு மட்டுமே - இது சால பொருந்தும். ஹி ஹி ஹி ....