•3:12 AM
பொய்யான உண்மையும் - உண்மையான பொய்யும்,
கசப்பான இனிப்பும் - இனிப்பான கசப்பும், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.
பார்த்தது பார்க்காமலும் - பார்க்காமல் பார்த்திருந்ததும்,
கோர்த்து சேராமலும் - சேர்ந்தது கோர்க்கபடாமலும், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.
பேசாமல் பேசியும் - பேசி பேசாமலும்,
உணர்ந்த பிறருக்காகவும் - பிறருக்காக உணர்ந்தும், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.
அலட்சியமான சிரிப்பும் - சிரிப்பான அலட்சியமும்,
பிடித்தபோது நடிக்கல - நீ நடித்தபோது பிடிக்கல, இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.
வலிக்கமலும் அடிக்கலாம் - அடிக்காமலும் வலிக்கலாம்,
சிரிப்புக்காக பிடிக்கலாம் - பிடிக்காமலும் சிரிக்கலாம், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.
பிடித்தபோது கொடுக்கல - கொடுத்தபோது பிடிக்கல,
இத பதித்தபோது நீ இருக்கல - நீ இருந்த போது நான் பதிக்கல, இப்போதும்...

10 கருத்துகள்:
படிக்காமலும் பின்னூட்டலாம்
பின்னூட்டாமலும் படிக்கலாம்
--------------------
வலிக்கமலும் அடிக்கலாம் - அடிக்காமலும் வலிக்கலாம்]]
அருமை இரவீ
புரிந்தும் புரியாமலும் - புரியாமல் புரிந்தும்
உங்க கவிதை :))))
அச்சோ .....ரவி என்ன ஆச்சு.பயந்தே போய்ட்டினம்.
இப்பத்தான் பாத்தினம்.
உண்மையாத்தான்.
இவ்ளோ பெரிய கவிதை.ஆனா ஒண்டு மட்டும் விளங்குது.என்னமோ கவிதைக்குள்ள இருக்கு.
அப்பிடியெல்லோ.
//பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.//
அப்பிடியெண்டால்.சில நேரம் காதல்.
காதல் வந்திட்டினமோ !
@ஜமால்,
நன்றி ஜமால்.
படிச்சிட்டு திட்டினாலும் - திட்டிட்டு படிச்சாலும் : படிச்சிட்டீங்கள அது போதும்.
@G3,
புரியாத விஷயமே புரியும் போது - புரிஞ்ச விஷயம் புரியாதா என்ன ?
நன்றி G3,
@ ஹேமா,
அச்சோ .....ஹேமா ...
யானும் பயந்தே போய்ட்டினம்.
உண்மையாத்தான். அப்பிடியெண்டால்...
எனக்கு அண்ட சம்பவம் நடந்தா .. பூமிக்கு விசனம் வந்துடுமல்லோ.
//இவ்ளோ பெரிய கவிதை.ஆனா ஒண்டு மட்டும் விளங்குது.என்னமோ கவிதைக்குள்ள இருக்கு.
அப்பிடியெல்லோ.//
அப்படி இல்லlanginam.
----
சொல்லவந்தத சொல்லாமலும் - சொல்லாம விட்டத சொல்லியும்,
பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் நன்றி.
இதையும் படுச்சேன் நானு - நானும் படுச்சேன் இதைய ...
நா இப்போ கீழ்பாக்கத்துல - கீழ்பாக்கத்துல நா இப்போ ...
கவுஜ சூப்பர் - சூப்பர் கவுஜ ......
என்னமா கவிதை..... கலக்குறீங்க போங்க.....
நல்லா இருந்தது உங்கள் கவி வரிகள்....
வாழ்த்துக்கள்......
அப்டி இப்டின்னு சொல்லிட்டு... இப்டி அப்டின்னு சொல்லிட்டு புரிஞ்சி போய் புரியாமல் புரிந்து புரிஞ்சிக்கிட்டு உங்கள பார்த்து பாக்காம... வந்து பார்த்து சொல்லிட்டு போறேன். நல்லாயிருக்கு.
நல்லாயிருக்கு!
//பிடித்தபோது கொடுக்கல - கொடுத்தபோது பிடிக்கல,
இத பதித்தபோது நீ இருக்கல - நீ இருந்த போது நான் பதிக்கல, இப்போதும்//
பிடிக்கவில்லையா ?
சாந்தி
@லவ்டேல் மேடி
நன்றி உங்களுக்கு - உங்களுக்கும் நன்றி.
@சப்ராஸ் அபூ பக்கர்,
நல்வரவு - வாங்க மிக்க மிக்க மகிழ்ச்சி ...
தொடர்ந்து வாங்க.
@ஆனந்த்,
நன்றி ஆனந்த் - உங்க கஷ்டம் புரியுது (சாம் அண்டர்சன் படம் பார்த்த அனுபவத்தில இருப்பீங்கன்னு நினைக்கிறேன்).
@வால்பையன்,
நன்றி வால்.
@ சாந்தி,
வாங்க சாந்தி சுகம் தானே?
// //பிடித்தபோது கொடுக்கல - கொடுத்தபோது பிடிக்கல,
இத பதித்தபோது நீ இருக்கல - நீ இருந்த போது நான் பதிக்கல, இப்போதும்//
பிடிக்கவில்லையா ?//
இத அப்படி கூட புரிஞ்சுக்கலாமா ...
பிடி கொடுக்கல னு சொல்லி இருக்கலாமோ ???
யோசிக்க நல்லா இருக்கு.