Author: - இரவீ -
•10:16 PM
மக்களே... இந்த ஹேமாவ நம்பி உப்புமட சந்தியில் நான்   கதை பேச போனா - எப்படி என்ன மாட்டிவிட்டுருக்காங்க பாருங்க ...

சரி போகட்டும் ... என்னையும் ஒரு பதிவரா நெனச்சு தொடருக்கு அழைத்ததற்கு நன்றி ஹேமா... :

ஹேமாவோட தொடர் கேள்விகளுக்கு பதில் சொல்லுறதுக்கு முன்னால உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்ல போறேன் - நானும் ஒரு ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியா இருக்குறது இப்ப தான் எனக்கு தெரிய வந்தது அதான் நம்ம அந்நியன் படம் மாதிரி- இப்போ அவங்களுக்கு அறிமுகம்...
1. அம்பி - அம்மா பையன்.
2. ரவியோ - ஆசை தோசை அப்பள வட பையன் (இதுக்கே... கோவப்பட்டா எப்படி - இன்னும் நிறைய இருக்கு தொடர்ந்து படிங்க ...).
3. அந்நியன் - மனசாட்சி பையன்.

இப்ப இவங்க மூணு பேரும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல போறாங்க.

A)அழகு என்பது என்ன ?நிரந்தரமானதா ?

1. அம்பி :- அம்மாவின் சிரிப்பு, தலை கோதி-முதுகு தட்டும் பாசம், கோவப்பட தெரியாமல் கோவப்படும் அந்த முகம் எல்லாம் அழகுதான் - கண்டிப்பா நிரந்தரம்.

2. ரவியோ :- பசுமையான நினைவுகள் அனைத்துமே அழகு தான் - நினைவுன்னு சொன்னதுமே புரிஞ்சிருக்கும் இது நிரந்தரம் இல்லைன்னு - என் மனசு போல.

3. அந்நியன் :- ஒவ்வொரு அணுவும் தனித்துவமான அழகான விஷயம் - மனதியல் விஷயம் என்பதால் - ஏற்று கொள்ள விரும்பாத விஷயத்த அழகு இல்லன்னு சொல்லிடறோம் - உண்மையா அழகில்லா விஷயம் உலகில் இல்லை.

B)காதல் மனிதனுக்கு அவசியமா ?

1. அம்பி :- கண்டிப்பா தேவை - அது வாழ்க்கை துணையுடன் மட்டும் அல்ல - சுற்றம் மற்றும் நட்புகளுடனும் அவ்வாறே இருக்கணும்.

2. ரவியோ :- அதுவே உண்மையான வாழ்க்கை - உங்க வாழ்க்கையில் எப்போது காதல் வந்தது என்பதை சொன்னால், நீங்க எப்போது வாழ ஆரம்பிச்சீங்கன்னு நான் சொல்லிடுவேன். (இங்க வாழ என்பதை சாக என்று படித்த அனைவருக்கும் ஒரு கொட்டு).

3. அந்நியன் :- இப்படி ஒரு விவாதமே தேவை இல்லை - ஏன்னா வாழ்வியலின் ஆதாரமே இதுதான் - நமது செயல் ஒவ்வொன்றும் இதன் அடிப்படையிலேயே இயங்குகிறது.

C)கடவுள் உண்டா ?

1. அம்பி :- கண்டிப்பா இருக்கார் - ஏன்னா நம்பிக்கை தான் கடவுள் -ஒரு சின்ன சலனம் கூட இல்லாமல் உண்மையா நம்பி பாருங்க உங்களுக்கும் புரியும்.

2. ரவியோ :- நினைத்தது நடக்கும் போது இருக்குன்னு நம்புவோம் - நடக்கதாத போது இல்லாததை நினைச்சொம்னு விட்டுட்டு போய்டே இருக்கணும்.

3. அந்நியன் :- எல்லாருக்கும் புரியறமாதிரினா 'நமக்கு அப்பாற்பட்ட சக்தி' - அது எண்ண அலைகளா, இயற்கையின் அலைகளா அல்லது மற்ற வகயிலான அலைகளா சரியாக தெரியலைனாலும் - ஒருவகையான சக்தி - நமக்கு அப்பாற்பட்ட சக்தி.

D)பணம் அவசியமா ?

1. அம்பி :- இரண்டாம் பட்சம் தான்.

2. ரவியோ :- .கண்டிப்பா - "இதெல்லாம் என்ன செய்ய போதோனு" சொன்னவங்கள '"நம்ம பய்யன் தான்...- பய்யன்னா இப்படி தான் இருக்கணும்" னு சொல்ல வச்சுதே,
அது மட்டுமா ... "ஏய்... கொஞ்சம் அப்பறமா கால் பண்ணுறீயா" அப்டீனவங்க "ஹாஇய்.... நெனச்சேன் கால் பண்ணிட்டே... யு நோ நானே கால் பண்ணனும்னு நெனச்சுகிட்டு இருந்தேன்" அப்படீனது...
அதுமட்டுமா... "இது தான் இருக்கு வேணும்னா சாப்டு" என்பது "என்னப்பா சாப்டுற கேட்டுகிட்டு சமைக்கலாம் னு இருந்தேன்" னு சொன்னது மட்டுமல்ல எவ்ளவோ சொல்லலாம் ...
இல்லாத போது பிடித்த விஷயங்களை - இருக்கும் போது பிடிக்காமல் மாற்றிய உன்னை பிடிக்காமலா போகும்.

3. அந்நியன் :- தேவைக்கு அதிகமாக ஒரு பைசா வைத்திருந்தாலும் - அவன் திருடனா அறிவிக்க படனும் - அடுத்த மாதம் உலகமே சந்தோஷமாயிருக்கும்.

நான் இந்தத் தொடருக்கு அன்போடு அழைப்பது...

நட்புடன் ஜமால்:

G3 :

வால்பையன்

குறிப்பு: தட்டச்சு பிழையாள 'ரோமியோக்கு பதில் ரவியோ னு' பதிவாய்ட்டு...
கொய்யாலே ... ஏன் என்ன யாருக்குமே பிடிக்கலங்கர விஷயம் இப்போதான் விளங்குது.

மீண்டும் ஒருமுறை நன்றி ஹேமா.
|
This entry was posted on 10:16 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 கருத்துகள்:

On 21 ஆகஸ்ட், 2009 அன்று 10:58 PM , வால்பையன் சொன்னது…

விரிவா, விளக்கமா சொல்லியிருக்கிங்க!
உங்க அளவுக்கு என்னால முடியுமான்னு தெரியல!

 
On 21 ஆகஸ்ட், 2009 அன்று 11:27 PM , பெயரில்லா சொன்னது…

பிரிச்சி அழகாக சொல்லியிருக்கீங்க... ரவீ அசத்தல். உங்க அளவுக்கு சொல்ல முடியல.. ஏதோ சொல்லியிருக்கிறேன். என் மனம் பேசியப்படி...

 
On 22 ஆகஸ்ட், 2009 அன்று 2:19 AM , ஹேமா சொன்னது…

ரவி இப்பிடி அந்நியன் ஸ்டைல்ல அசத்திட்டீங்க.ரவி பையா பய்யன் இல்ல பையன்.திருத்துங்க.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மனநிலைன்னு மூணு பேர் நிலையை சரியாச் சொல்லியிருக்கீங்க.எதிர் பாக்கல.அது சரி யார் உங்களைப் பிடிக்கல சொன்னது.சொல்லுங்க.நான் கேக்கிறேன்.

ஏன் ரவி இன்னும் இரண்டு பேரை இணைச்சிருக்கலாமே.ஆனந்தும் இரண்டு பேரோடு விட்டிருக்கார்.ஏன் கஞ்சத்தனம்.

நன்றியும் வாழ்த்தும் என் பக்கம் இருந்து.

அருமையா ஒரு பதிவாளர் வாலபையன்.ஆன்மீகம் பத்திக் கலக்குவார் பாருங்க.ஜமால் நிச்சயம் ஜமாய்ப்பார்.மத்தவரை எனக்கு அவ்வளவா அறிமுகம் இல்லை.

 
On 22 ஆகஸ்ட், 2009 அன்று 8:20 AM , G3 சொன்னது…

LOL :))) மீண்டும் ஃபார்ம்க்கு வந்துட்டீங்க போல :))) வாழ்த்துக்கள் :)))

//(இங்க வாழ என்பதை சாக என்று படித்த அனைவருக்கும் ஒரு கொட்டு).//

சாக என்று படிக்க தூண்டிய உங்களுக்கும் அதே கொட்டு :-p

 
On 22 ஆகஸ்ட், 2009 அன்று 8:21 AM , G3 சொன்னது…

//தட்டச்சு பிழையாள 'ரோமியோக்கு பதில் ரவியோ னு' பதிவாய்ட்டு...//

:))))))))))) நல்லா வாய்விட்டு சிரிச்சேன் :)))

 
On 22 ஆகஸ்ட், 2009 அன்று 8:22 AM , G3 சொன்னது…

//நான் இந்தத் தொடருக்கு அன்போடு அழைப்பது...
G3 ://

ஆஹா.. கோர்த்து விட்டாச்சா.. சரி.. எவ்வளவோ எழுதிட்டோம்.. இதை எழுத மாட்டோமா ;)))))

 
On 22 ஆகஸ்ட், 2009 அன்று 11:23 AM , நட்புடன் ஜமால் சொன்னது…

ரொம்ப வித்தியாசமான அனுகுமுறை ரவி-யோ!

உங்கள பதிவு போட வைத்த ஹேமாவுக்கு நன்றி.

எனக்கும் எழுத(?) ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு உங்களுக்கு நன்றி.

ரொம்ப சென்ஸிட்டீவான சப்ஜெக்ட் ஒன்னும் இருக்கு இதுலே - கொஞ்சம் டைம் கொடுங்க பாஸ்.

 
On 22 ஆகஸ்ட், 2009 அன்று 11:24 AM , நட்புடன் ஜமால் சொன்னது…

ரவியோ - ஆசை தோசை அப்பள வட பையன் (இதுக்கே... கோவப்பட்டா எப்படி - இன்னும் நிறைய இருக்கு தொடர்ந்து படிங்க ...)]]


ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ் ;)

 
On 22 ஆகஸ்ட், 2009 அன்று 11:52 AM , G3 சொன்னது…

Tag pottaachu :D

 
On 24 ஆகஸ்ட், 2009 அன்று 5:45 PM , sakthi சொன்னது…

வித்தியாசமான சிந்தனை கலக்கல்

 
On 24 ஆகஸ்ட், 2009 அன்று 8:00 PM , - இரவீ - சொன்னது…

@வால்பையன்,

//விரிவா, விளக்கமா சொல்லியிருக்கிங்க!//

நன்றி வால்.

//உங்க அளவுக்கு என்னால முடியுமான்னு தெரியல!//

உங்களுக்கே ஓவரா தெரியல...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

@ ஆனந்த்
//பிரிச்சி அழகாக சொல்லியிருக்கீங்க... ரவீ அசத்தல்.//

நன்றி ஆனந்த்.

// உங்க அளவுக்கு சொல்ல முடியல.. ஏதோ சொல்லியிருக்கிறேன். என் மனம் பேசியப்படி...//
எல்லாம் பிளான் பண்ணி வந்தீங்களோ ...???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

@ஹேமா

//ரவி இப்பிடி அந்நியன் ஸ்டைல்ல அசத்திட்டீங்க.//

முதல் முறைய உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பின்னூட்டம் - சந்தோஷமா இருக்கு.

//ரவி பையா பய்யன் இல்ல பையன்.திருத்துங்க.//

போச்சுடா - மாத்திட்டேன் பாருங்க.

//எதிர் பாக்கல.அது சரி யார் உங்களைப் பிடிக்கல சொன்னது.சொல்லுங்க.நான் கேக்கிறேன்.//

இத நான் எதிர் பாக்கல. (அப்பாடா சமாளிச்சாச்சு).

//ஏன் ரவி இன்னும் இரண்டு பேரை இணைச்சிருக்கலாமே.ஆனந்தும் இரண்டு பேரோடு விட்டிருக்கார்.ஏன் கஞ்சத்தனம்.//

நாங்கல்லாம் வரவறிந்து செலவு செய்றவங்க :)

//நன்றியும் வாழ்த்தும் என் பக்கம் இருந்து.//

எந்த பக்கம்னு சொல்லல ???

//அருமையா ஒரு பதிவாளர் வாலபையன்.ஆன்மீகம் பத்திக் கலக்குவார் பாருங்க.
//ஜமால் நிச்சயம் ஜமாய்ப்பார்.//
//மத்தவரை எனக்கு அவ்வளவா அறிமுகம் இல்லை.//

எல்லாருமே ஜாம்பவான்ஸ்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
@G3
//LOL :))) மீண்டும் ஃபார்ம்க்கு வந்துட்டீங்க போல :))) வாழ்த்துக்கள் :)))//

நன்றி G3.

//சாக என்று படிக்க தூண்டிய உங்களுக்கும் அதே கொட்டு :-ப//

யம்மீய்ய்ய்ய் ....

//ஆஹா.. கோர்த்து விட்டாச்சா.. சரி.. எவ்வளவோ எழுதிட்டோம்.. இதை எழுத மாட்டோமா ;)))))//

இதான் G3.

//Tag pottaachu //
பாருங்கப்பா புயலின் வேகத்தை ... கலக்குறீங்க போங்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

@ ஜமால்
//ரொம்ப வித்தியாசமான அனுகுமுறை ரவி-யோ!//

நீங்க சொன்னா தப்பா இருக்குமா .. நன்றிங்கோ.

//ரொம்ப சென்ஸிட்டீவான சப்ஜெக்ட் ஒன்னும் இருக்கு இதுலே - கொஞ்சம் டைம் கொடுங்க பாஸ்.//

பெருசா எதிர்பார்க்கறோம் ...

//ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ் ;)//

கி கி கி... தேங்க்ஸ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

@sakthi
வணக்கம்,
வாங்க வாங்க ...

//வித்தியாசமான சிந்தனை கலக்கல்//

மிக்க நன்றி - தொடர்ந்து வாங்க. (நீ தொடர்ந்து எழுதுவியானு எல்லாம் கேக்க கூடாது).