Author: - இரவீ -
•12:56 AM


அநீதிக்கு எதிரான கண்டனம்!
அடக்கு முயற்சிக்கு கண்டனம்!
பழிவாங்கும் அதிகாரத்துக்கு எதிரான கண்டனம்!

அப்பு....!!! நல்லவனை வாழவிடுங்கப்பு ...!!! நாட்டுல கொஞ்சம் மழைபெய்யட்டும்.

இந்த அநீதிக்கு எதிரான உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க நீங்கள் இங்கே கையெழுத்து இடலாம்..

நன்றி ஜமால்.

நன்றி வால்பையன்.
Author: - இரவீ -
•12:44 AM
விரல் நுனி வெடித்து
சிந்தனையின் பிம்பம் சிதறியபடி
வெளித்து வெளுப்பது வெய்யிலன்று
பந்தங்களும் பாசங்களும்.

மரத்திற்கு பதிலாய் இங்கு
பட்டு போக பாலைவனத்தில்,
வெறிச்சோடிய மன பரப்பில்
நிரம்பிய வெக்கையும்
வறண்ட நினைவுகளுமாய்...

எனது கவிதைகளை(சரி.. சரி... கிறுக்கல்களை), தனது வலைபக்கத்தில் சேர்த்துகொண்ட தீவு.காம் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.
Author: - இரவீ -
•8:17 PM
யார் மனசுல யார்???? ... அவங்களுக்கு என்ன பேர்???? அப்டீங்கிற ஸ்டைல்ல ஹேமா ஒரு பதிவு போட்டிருக்காங்க,அவங்களுக்கு பதில் பதிவா இல்லாட்டியும் - கொஞ்சம் சிரிச்சு வைக்க சில கற்பனை வரிகள்.

பசங்க என்ன நினைக்கிறாங்க இப்ப: ????

வாய்: யே நீ ரொம்ப அழகா இருக்க ...
மெய்: சனியன் - வந்து வாச்சிருக்கு பாரு.

வாய்: நீ இல்லாம நான் இல்லை
மெய்: நீ இல்லைனா எவ்ளோ.... நிம்மதி.

வாய்: பொறுமையா கிளம்புமா அவசரம் இல்லை...
மெய்: திருவாரூர் தேர் கூட கிளம்பிடும் ... இந்த சனியன் கிளம்புதா பார்....

வாய்: என்னை, அப்படியே தெரிஞ்சு வச்சிருக்க...
மெய்: லூசு... எப்படி தான் இப்படி மொக்க தனமா யோசிக்குதோ ...கடவுளே.

வாய்: அழகான பொண்ணுங்க ரொம்ப திமிரா இருக்காங்கப்பா...
மெய்: இல்லாதத நெனச்சு பொறாம படாதா - அவ பாட்டுக்கு போகட்டும்.

வாய்: உன்னை ஆண்டவன் எனக்காகவே படைச்சிருக்கான்...
மெய்: அவன்(ஆண்டவன்) மட்டும் என் கையில சிக்கினான் ...

வாய்: இன்னைக்கு சமையல் அருமை - சமைச்ச கைக்கு மோதிரம் போடணும்.
மெய்: அந்த கைய்ய வெட்டி கரியடுப்புல போட... சமைக்கிறேன்னு சொல்லி சித்திரவத பன்னுறாலே...

வாய்: நீ ஊருக்கு போய்ட்டீனா - நான் இங்க என்ன பண்ணுவேன்,
மெய்: அப்படி ஒரு நல்லநாள் என் வாழ்க்கையில வருமா ????

டெரர்: என்னதிதிது.... அப்படி மோட்டுவளைய பாத்து என்ன சிந்தனை???
வாய்: ஒண்ணுமில்லமா... சும்மா ...
மெய்: உன்கிட்ட மாட்டின பிறகு, சிந்திக்குறதுனா என்னான்னு சிந்தனை பண்ணவேண்டி இருக்கு.

டெரர்: எதுக்கு எல்லாத்துக்கும் இப்படி லூசு மாதிரி சிரிக்கறீங்க
வாய்: ஹி ஹி ஹி ... ஹி ஹி ஹி ...
மெய்: உண்மைய சொன்னா மட்டும் புரிஞ்சுக்கவா போகுது .... ஐயோ ஐயோ ...

குறிப்பு: ஏதோ என்னால முடிஞ்ச உதவியை செஞ்சிருக்கேன் - கல்யாணமான சிக்கி தவிக்கும் சிங்கங்களே - இனி உங்களை காப்பத்திக்கிறது உங்க பொறுப்பு.
Author: - இரவீ -
•10:25 PM
சந்தேகிக்கின்றேன்,
உனக்கெதிராய் கூறப்படும்
உண்மையெனும் வார்த்தையொன்றை.

தவி(ற்)க்கின்றேன்,
நீ தவமென நினைப்பது
தவறாக வேண்டாமென்று.

தவிக்கின்றேன்,
நீ தலை தடவாவிடினும் என்னை
தலை மூழ்காதிருப்பாயென்று.

அன்புடன்,
தம்பி - இரவி.
Author: - இரவீ -
•7:50 PM


அறிவோடு அகந்தை.
அழகோடு அலப்பறை.
கனிவோடு கண்டிப்பு.
சிரிப்போடு செருக்கு.
பரிதவிப்போடு பயம்.
தீர்க்கத்தோடு மூர்க்கம்.
வேகத்தோடு கோவம்.
ஆக்கத்தோடு தாக்கம்...

இங்கு தர்க்கம்,
முதலானதும் முடிவானதும்
முடிச்சாக முடியுமென்பது.



பாலோடு விஷமும்,
விஷத்தோடு பாலும்,
பயன்பாட்டில் ஒன்றே.

முதன்மை முடிவை மறைக்கும்,
முடிவு முதன்மையை முடிக்கும்.

- இரவிப்பிரம்மம்.
Author: - இரவீ -
•8:16 PM

மணமில்லா மனமிது
நிஜம் களைக்கா கனவு கலைய
இரையாது இறையாகிய இதயம்,
வளிக்கவும் இல்லை வலிக்கவும் இல்லை
வெளியில் வெலியாகி
பனியாது பணிமறக்கும்.




ஹேமா சொன்னது…

மணமில்லா மனமிது
நிஜம் களைக்கா கனவு கலைய
இரையாது இறையாகிய இதயம்,
வளிக்கவும் இல்லை வலிக்கவும் இல்லை
வலித்து வெளியாகி
பனித்து பணிமறக்கும்.
Author: - இரவீ -
•8:38 PM
TamilWin.Com

Author: - இரவீ -
•1:53 AM
ஊரெல்லாம் உறக்கத்தில்
உறங்காமல் நான்
உறங்கவிடாமல் உன் நினைவுகள்

நன்றி: என் அருமை சங்கீத தோழிக்கு...
Author: - இரவீ -
•11:17 PM
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும்,

இதயங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!!!

அன்புடன்,
இரவி.
Author: - இரவீ -
•9:16 PM