Author: - இரவீ -
•7:50 PM


அறிவோடு அகந்தை.
அழகோடு அலப்பறை.
கனிவோடு கண்டிப்பு.
சிரிப்போடு செருக்கு.
பரிதவிப்போடு பயம்.
தீர்க்கத்தோடு மூர்க்கம்.
வேகத்தோடு கோவம்.
ஆக்கத்தோடு தாக்கம்...

இங்கு தர்க்கம்,
முதலானதும் முடிவானதும்
முடிச்சாக முடியுமென்பது.



பாலோடு விஷமும்,
விஷத்தோடு பாலும்,
பயன்பாட்டில் ஒன்றே.

முதன்மை முடிவை மறைக்கும்,
முடிவு முதன்மையை முடிக்கும்.

- இரவிப்பிரம்மம்.
|
This entry was posted on 7:50 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 கருத்துகள்:

On 27 ஜூன், 2010 அன்று 9:28 PM , ஹேமா சொன்னது…

நான் ஒண்ணுமே சொல்ல வரலப்பா.இதெல்லாம் பெரியவங்க சொல்ல்யியிருக்கிற பெரிய விஷயங்கள்.சாமி குத்தமாயிடும்.

 
On 28 ஜூன், 2010 அன்று 9:44 AM , நட்புடன் ஜமால் சொன்னது…

முதன்மை முடிவை மறைக்கும்,
முடிவு முதன்மையை முடிக்கும்.]]

டாப்பு ...

 
On 28 ஜூன், 2010 அன்று 2:44 PM , தமிழ் மதுரம் சொன்னது…

பாலோடு விஷமும்,
விஷத்தோடு பாலும்,
பயன்பாட்டில் ஒன்றே//


ஆஹா அருமையான சிந்தனையினைச் சந்தமெனும் வார்த்தையினுள் உள்ளடக்கி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழா!
விக்கலோ நக்கல்
எமையெல்லாம் சிரிக்க வைக்கும் பம்பல்!


பம்பல் என்பது எங்கடை ஊரிலை காமெடியைக் குறிக்கப் பயன்படுவது. வாழ்த்துக்கள் சகோதரா!

 
On 30 ஜூன், 2010 அன்று 4:28 PM , தமிழ் மதுரம் சொன்னது…

யோ விக்கலுக்குப் பிறகு பதிவைக் காணேல்லை?
புதுப் பதிவு எப்ப வரும் தோழா?

 
On 30 ஜூன், 2010 அன்று 10:02 PM , - இரவீ - சொன்னது…

@ஹேமா :
நம்ம பொண்ணுங்க இன்னும் சாமியார் மேல வச்சிருக்கிற பக்திய பார்க்கும் போது
எப்ப ஆசிரமம் ஆரம்பிக்கனு இருக்கு... நான் உங்களை குத்தம் சொல்லலை ஹேமா ,
நன்றி நன்றி நன்றி.

@ நட்புடன் ஜமால்:
இது ஆப்பு இல்லையே ... ???? :D நன்றி ஜமால்.

@தமிழ் மதுரம்:
நன்றி நண்பரே, உங்க கடை அளவுக்கு இங்க சரக்கு இருக்கறது இல்லை ...
இருக்கிறதை வச்சு கடைத்தெருவில் காத்து வாங்கறோம் அம்புட்டுதேன்.

இங்க பம்பல் னா "பதுங்குகிற" அப்டீன்னு பொருள்படுமாறு உபயோகிப்பாங்க...
"இரவி ரொம்ப பம்புற மாதிரி இருக்கு" அப்டீனா "இரவி ரொம்ப பதுங்குகிற மாதிரி இருக்கு" னு ... சொல்வதற்கு உபயோகிப்பாங்க.

 
On 1 ஜூலை, 2010 அன்று 1:42 PM , கலா சொன்னது…

அறிவோடு அகந்தை.
அழகோடு அலப்பறை.
கனிவோடு கண்டிப்பு.


சிரப்போடு செருக்கு.
சிறப்போடு செருக்கா?
சிரிப்போடு செருக்கா?
இல்லை நீங்கள் எழுதியதுதான்
சரியா?


பரிதவிப்போடு பயம்.

தீர்க்கத்தோடு மூர்க்கம்.
வேகத்தோடு கோவம்.
ஆக்கத்தோடு தாக்கம்...

இங்கு தர்க்கம்,
முதலானதும் முடிவானதும்
முடிச்சாக முடியுமென்பது.\\\\\\

சூரியபகவானே!
யாருக்கு தூதனுப்பி இந்தக்
கேள்வி பதிலெல்லாம்?

யாரை எதிர் பார்கிறீர்கள்
மூன்று முடிச்சுக்கு?

ஏதாவது உதவி{தூது போக}
வேண்டுமோ!!

 
On 2 ஜூலை, 2010 அன்று 12:31 AM , - இரவீ - சொன்னது…

வருகைக்கு நன்றி கலா,

//சிரப்போடு செருக்கு.
சிறப்போடு செருக்கா?
சிரிப்போடு செருக்கா?
இல்லை நீங்கள் எழுதியதுதான்
சரியா?//

சிறப்போடு னு எழுத நினைத்தது தான்....;), நீங்க கொடுத்த சிரிப்பு இன்னும் பிடிச்சிருந்ததால அப்படியே மாத்திவிட்டேன்.
மிக்க நன்றி.

//யாருக்கு தூதனுப்பி இந்தக்
கேள்வி பதிலெல்லாம்?

யாரை எதிர் பார்கிறீர்கள்
மூன்று முடிச்சுக்கு?

ஏதாவது உதவி{தூது போக}
வேண்டுமோ!!//

உங்களுக்கு கிண்டலாக பதில் எழுத கூட பயமா இருக்கு ... :(

நீங்க கேட்டதே மிகுந்த சந்தோசம்.