•10:25 PM
சந்தேகிக்கின்றேன்,
உனக்கெதிராய் கூறப்படும்
உண்மையெனும் வார்த்தையொன்றை.
தவி(ற்)க்கின்றேன்,
நீ தவமென நினைப்பது
தவறாக வேண்டாமென்று.
தவிக்கின்றேன்,
நீ தலை தடவாவிடினும் என்னை
தலை மூழ்காதிருப்பாயென்று.
அன்புடன்,
தம்பி - இரவி.
உனக்கெதிராய் கூறப்படும்
உண்மையெனும் வார்த்தையொன்றை.
தவி(ற்)க்கின்றேன்,
நீ தவமென நினைப்பது
தவறாக வேண்டாமென்று.
தவிக்கின்றேன்,
நீ தலை தடவாவிடினும் என்னை
தலை மூழ்காதிருப்பாயென்று.
அன்புடன்,
தம்பி - இரவி.
13 கருத்துகள்:
அச்சோ.....தம்பி ரவி
....என்னாச்சுப்பா.
அடிக்கடி பதிவெல்லாம் வருது.
நான் இண்ணைக்கு ஒரு கவிதை போடலாம்ன்னு இருந்தேன்.இதைப் பார்த்த அப்புறம் வேணாம்ன்னு விட்டாச்சு.
கவிதை என்னமோ சொல்லுது.
மனசின் ஏக்கமா
எதிர்பார்ப்பா,தவிப்பா !
இது ரவி...யா...!
சந்தேகிக்கின்றேன்,
உனக்கெதிராய் கூறப்படும்
உண்மையெனும் வார்த்தையொன்றை.]]
அதெல்லாம் சந்தேகமே கூடாது
அது பொய்தான்.
-----------------
தவிர்க்காதீங்க - தவறாகாது
-----------------
தவிப்புக்கு - ???
தவி(ற்)க்கின்றேன்,
நீ தவமென நினைப்பது
தவறாக வேண்டாமென்று.
azakana hykoo ravee
ஹைக்கூ கவிதையிலை எல்லாம் தலை கலக்கிறார்! ஏதாவது காதல் வந்த மாதிரி இருக்கோ? அறிஞ்சவை சொல்லுங்கோ!
கவிதைகள் மூன்றுமே அருமை. இரு வரிகளுக்குள்ளே இனிய பல கருத்துக்களை உள்ளடக்கியுள்ளீர்கள்.
தவிக்கின்றேன்,
//நீ தலை தடவாவிடினும் என்னை
தலை மூழ்காதிருப்பாயென்று//
இவ் வரிகளினை நிஜம் என்று நினைப்பதா? கற்பனையென்று நம்புவதா? ஆனாலு உங்கள் விண்ணப்பம் வீண் போகாது போல இருக்கிறது.
இரவீ கவிதைகள் அருமை தோழா! தொடர்ந்தும் முயற்சி செய்து நிறையப் பதிவுகள் தர வேண்டும்!
சந்தேகிப்பதும்,தவிர்ப்பதும்,தவிப்பதும்...
யார்! யாருக்கு?
ஏன்! எதற்கு?
மிகவும் துன்பப்படுகிறீர்களோ?
அதென்ன! முடிவில் தம்பி இரவி
ஹேமாவுக்குத் தம்பியாய் இருக்கலாம்...ஆனால்
இதை என்னைப்போல் எத்தனை சின்னஞ்சிறுசுகள்
படிக்கும் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?
இது அக்காமார்களுக்கு எழுதிய
கவிதை போல் இல்லையே?
கவி இரவி!இது நம்ம பேட்டையில்லை.உள்ளே வரலாமா?
கனம் நிறைந்த வரிகள்
@ஹேமா:
//அச்சோ.....தம்பி ரவி
....என்னாச்சுப்பா.//
ஒண்ணுமில்ல சொர்ணாக்கா!!!
//நான் இண்ணைக்கு ஒரு கவிதை போடலாம்ன்னு இருந்தேன்.இதைப் பார்த்த அப்புறம் வேணாம்ன்னு விட்டாச்சு.//
இப்படியா அபாண்டமா என் மீது பழி போடுறது ...
ஹேமாவின் நண்பர்கள் நிறைய இங்க வந்து பின்னூட்டம் போடுறது நினைத்து மகிழ்ச்சியா இருந்தா... இப்படி ஆப்பு வைக்கறீங்களே. பூவோடு வழிசென்ற காற்றும் மணக்கட்டும் விடுங்க.
//கவிதை என்னமோ சொல்லுது.
மனசின் ஏக்கமா
எதிர்பார்ப்பா,தவிப்பா !//
எல்லாரும் ...ஒன்னும் புரியலைன்னு எவ்ளோ நல்லா சொல்லுறீங்க ..
உங்க அடுத்த கவிதைக்கு கும்மி அடிச்சா தான் இப்படி வம்படி வழக்கு செய்யாமல் இருப்பீங்க.
@ஜமால்:
நீங்க சொன்னா சரியா இருக்கும் :)
நன்றி ஜமால்.
@ sakthi:
வாங்க சக்தி, மிக்கமகிழ்ச்சி - வருகைக்கும் கருத்துக்கும்.
@தமிழ் மதுரம்:
//ஹைக்கூ கவிதையிலை எல்லாம் தலை கலக்கிறார்!
ஏதாவது காதல் வந்த மாதிரி இருக்கோ? அறிஞ்சவை சொல்லுங்கோ!//
நன்றி நண்பரே, உங்களனைவரின் கொஞ்சுதமிழ் பேச்சுவழக்கு, மூச்சு திணற வைக்குது.
அன்னை மீது வருவதும் காதல் தானே.
@தமிழ் தங்கை (யாரா ???? கொய்யால... அது நம்ம சின்ன பொண்ணுக்கு):
சந்தேகிக்கின்றேன்,
நீங்க :
//நெருப்பை தின்று வளர்ந்தவரோ...
வெய்யலுக்கு வெந்நீர் கேட்பவரோ...
கடுப்பை உடையாய் அனிபவரோ...
முறைப்பை முறையாய் பயின்றபவரோ. அப்டீன்னு //
அம்மாடி சின்ன பாப்பா ...
வச்சிடாத பெரிய ஆப்பா.
சும்மா லூலாயி ஓகே ...
@கலா:
நன்றி தங்கள் வருகைக்கும் கேள்விகளுக்கும்.
//சந்தேகிப்பதும்,தவிர்ப்பதும்,தவிப்பதும்...
யார்! யாருக்கு?
ஏன்! எதற்கு?//
எழுதினது புரியலைன்னு சொல்லுறத , இப்படியும் சொல்லலாமோ.?
//மிகவும் துன்பப்படுகிறீர்களோ?//
துன்பத்தின் துன்பம் நான் - கவலை வேண்டாம் - மிக்க நன்றி.
//அதென்ன! முடிவில் தம்பி இரவி//
ஆரம்பத்தில போட்டா நல்லா இருக்காதுன்னு ...
//ஹேமாவுக்குத் தம்பியாய் இருக்கலாம்...ஆனால்
இதை என்னைப்போல் எத்தனை சின்னஞ்சிறுசுகள்
படிக்கும் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?//
நட்புக்கு ஏது உறவுமுறை.
//இது அக்காமார்களுக்கு எழுதிய
கவிதை போல் இல்லையே?//
அப்படியா ???
@ராஜ நடராஜன் :
இராஜ நடை போட்டுவரும் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
@யாதவன்:
வருக வருக : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே.
தவிக்கின்றேன்,
நீ தலை தடவாவிடினும் என்னை
தலை மூழ்காதிருப்பாயென்று.//
கவிதை மிக சிறப்பா இருக்குங்க.... ஏனிந்த கவலை?
@சி. கருணாகரசு:
குறையேதும் இல்லை.
மிக்க நன்றி அன்பரே.
aaha, Ravi ore sogam pola!?
பூரணி: மிக்க சந்தோசம் , எங்கே உங்க பதிவுகள் ...???
நன்றி... நன்றி.