•8:16 PM
மணமில்லா மனமிது
நிஜம் களைக்கா கனவு கலைய
இரையாது இறையாகிய இதயம்,
வளிக்கவும் இல்லை வலிக்கவும் இல்லை
வெளியில் வெலியாகி
பனியாது பணிமறக்கும்.
ஹேமா சொன்னது…
மணமில்லா மனமிது
நிஜம் களைக்கா கனவு கலைய
இரையாது இறையாகிய இதயம்,
வளிக்கவும் இல்லை வலிக்கவும் இல்லை
வலித்து வெளியாகி
பனித்து பணிமறக்கும்.
15 கருத்துகள்:
வார்த்தைகளை வைத்து தான் விளையாடுவாங்க
நீங்க எழுத்துகளை வைத்து விளையாடி இருக்கீங்க :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே.
ஜமால்...சும்மா சொல்லதீங்க.
இங்க என்ன எழுதியிருக்கார் ரவி !
இல்லை எனக்குத்தான் புரியலயா !
எழுத்துப்பிழையால் கருத்து மாறிக்கிடக்கா? இல்லை அதன் வடிவமே இவ்வளவும்தானா.
இதுதானா !
//ஜமால்...சும்மா சொல்லதீங்க.//
வேற எப்படிதான் சொல்ல சொல்லுறீங்க ???
//இங்க என்ன எழுதியிருக்கார் ரவி !//
யாருக்கு தெரியும்???
//இல்லை எனக்குத்தான் புரியலயா !//
யூ டூ....
//எழுத்துப்பிழையால் கருத்து மாறிக்கிடக்கா? இல்லை அதன் வடிவமே இவ்வளவும்தானா.
இதுதானா !//
நான் என்ன கருத்து கந்தசாமியா??? அதன் வடிவமே/படிவமே அவ்ளோ தானுங்கோ.
மிக்க நன்றி ஹேமா.
மணமில்லா மனமிது
நிஜம் களைக்கா கனவு கலைய
இரையாது இறையாகிய இதயம்,
வளிக்கவும் இல்லை வலிக்கவும் இல்லை
//வெளியில் வெலியாகி
பனியாது பணிமறக்கும்.//
வலித்து வெளியாகி
பனித்து பணிமறக்கும்.
ரவி....கடைசி ரெண்டு வரிகளையும் இப்பிடி மாத்திப் பாருங்க.இன்னும் அழகா இருக்குமோ !
இது என் அபிப்பிராயம் மட்டும்.
உங்கள் கவிதையின் கருவைக் கலைக்காமல் !
அண்ணே!
ஸாபெல்லிங் மிஸ்டேக்கா, இல்ல என் சிற்றறிவுக்கு தான் எட்டலையா!?
வணக்கம் இரவீ
ஞாபகம் வருகின்றதா?
எனக்குப் புரியல.
பதிவுலக பரிமேலழகர் யார் இருந்தாலும் எனக்கு இந்தப் பாடலின் அருஞ்சொற்பொருள் அனுப்புங்க.
நன்றி.
வித்தியாசமான சிந்தனை தோழா.. புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. பொருள் விளக்கம் போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.
நல்ல சொல் விளையாட்டு.
பாராட்டுகள்.
//வால்பையன் சொன்னது…
ஸாபெல்லிங் மிஸ்டேக்கா, இல்ல என் சிற்றறிவுக்கு தான் எட்டலையா!?//
மிஸ்டேக்கா ஸ்பெல்லிங் சிதறிட்டு தல.
//கலா சொன்னது…
வணக்கம் இரவீ
ஞாபகம் வருகின்றதா?//
வாங்க.. வாங்க.. கலா, வணக்கம் .. வணக்கம்!! சந்தோஷமும் நன்றியும்.
எனக்கு இறை கொடுத்த வரம் இரண்டு ...
1. நல்ல தூ(து)க்கம் (து - இல்லைனு சொல்ல தான்).
2. நல்ல நியாபக மறதி.
// kggouthaman சொன்னது… சொன்னது…
எனக்குப் புரியல.
பதிவுலக பரிமேலழகர் யார் இருந்தாலும் எனக்கு இந்தப் பாடலின் அருஞ்சொற்பொருள் அனுப்புங்க.
நன்றி.//
பக்கத்து ஊரு அய்யா...வாங்க... வாங்க...
பாட்டுனு சொன்ன உங்க வாய்க்கு ஒரு மூட்டை இனிப்பு கொடுக்கனும்..
பரிமேலழகர் பக்கத்துல இல்ல, ஆனா அவருக்கு அக்கா ஒருத்தவங்க இல்ல.. இல்ல ... இரண்டு பேர் இருக்காங்க... 1. ஹேமா 2. கலா - எதுக்கும் கேட்டு வைக்களாம்...
// தமிழ் மதுரம் சொன்னது…
வித்தியாசமான சிந்தனை தோழா.. புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. பொருள் விளக்கம் போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.
//
நட்பே...வருக... வருக...
புரிந்தும் புரியாமலும் இருக்கிறது ஒரு சுகம் நன்பா.
//சி. கருணாகரசு சொன்னது…
நல்ல சொல் விளையாட்டு.
பாராட்டுகள்.//
இப்படி பெரிய பெரிய ஜாம்பவான்லாம் வரிசையா வந்து போகும் போது... வயித்துகுள்ள் பட்டாம் பூச்சி பல்டி அடிக்குது.
உங்க பெரிய மனசுக்கு நன்றி நட்பே.