ஆரம்பபள்ளியில் படிக்கும் போது, மிக அரிதாக கிடைக்கும் ஊர் திருவிழா, மற்றும் உறவினர் ஊர் காசை - அன்றே நான் செலவிட்டாலும், தங்கையின் காசில் - அவ்வப்போது "காசன்கொட்டயார்" (கடைகாரர் பெயர்) கடையில் புளிப்பு மிட்டாய் வாங்கி சாப்பிடுவது வழக்கம். அதுல சுவாரஸ்யம் என்னன்னா என் தங்கை ஏமாந்து போறது ...
புளிப்பு மிட்டாய பாத்தீங்கனா மேல் பகுதி சற்று சொதசொதப்பான இனிப்புடனும், மத்தியில் பளிங்கு போன்ற பகுதியும் இருக்கும்.
ஒரு நாள் தங்கைக்கு வாங்கிய மிட்டாய் என் வாய்க்குள் வந்துவிட்டது (நான் தான் போட்டுட்டேன்), போட்டுட்டு திரும்பி பாத்தா தங்கை... நம்ம சமாளிபிகேசன் புத்தி உடனே வேல செய்ய ... ஒரு பொய் அந்த இடத்துல பிறந்தது, அதாவது "புளிப்பு மிட்டாய்ல உள்ளுக்குள்ள இருக்கும் பளிங்கு பகுதி மட்டுமே நல்லா இருக்கும் - மேல உள்ள சொத சொத பகுதி சும்மா தான்" னு ஒரு புருடா விட்டேன்,
அன்னிலேர்ந்து அடிச்சது யோகம், எப்ப என் தங்கை மிட்டாய் வாங்கினாலும் -சாப்ட்டுட்டு பளிங்கி எனக்கு குடுண்ணேனு முதல் படையல் எனக்கு வந்திடும்.
(இப்ப அதுக்கு திட்டு வாங்குறது வேற விஷயம்).
புளிப்பு மிட்டாய பாத்தீங்கனா மேல் பகுதி சற்று சொதசொதப்பான இனிப்புடனும், மத்தியில் பளிங்கு போன்ற பகுதியும் இருக்கும்.
ஒரு நாள் தங்கைக்கு வாங்கிய மிட்டாய் என் வாய்க்குள் வந்துவிட்டது (நான் தான் போட்டுட்டேன்), போட்டுட்டு திரும்பி பாத்தா தங்கை... நம்ம சமாளிபிகேசன் புத்தி உடனே வேல செய்ய ... ஒரு பொய் அந்த இடத்துல பிறந்தது, அதாவது "புளிப்பு மிட்டாய்ல உள்ளுக்குள்ள இருக்கும் பளிங்கு பகுதி மட்டுமே நல்லா இருக்கும் - மேல உள்ள சொத சொத பகுதி சும்மா தான்" னு ஒரு புருடா விட்டேன்,
அன்னிலேர்ந்து அடிச்சது யோகம், எப்ப என் தங்கை மிட்டாய் வாங்கினாலும் -சாப்ட்டுட்டு பளிங்கி எனக்கு குடுண்ணேனு முதல் படையல் எனக்கு வந்திடும்.
(இப்ப அதுக்கு திட்டு வாங்குறது வேற விஷயம்).
32 கருத்துகள்:
மீ த ஃபர்ஸ்ட்
இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் கண்டிப்பா மொக்க போட முடியாதுங்க :) ஐ யாம் சாரி :)
//
புளிப்பு மிட்டாய பாத்தீங்கனா மேல் பகுதி சற்று சொதசொதப்பான இனிப்புடனும், மத்தியில் பளிங்கு போன்ற பகுதியும் இருக்கும்.
//
மிகச்சரி :) எங்க ஊர்ல செவ்வக வடிவத்துல கிடைக்க்கும்
ஆமா.. பதிவு போட்ட விசயத்த ஏன் சொல்லவே இல்ல :)
இளமையின் நினைவுகளை மனதில் சுமப்பதே ஒரு வசந்த காலத்துக்குள் உலாவுவது போலத்தான்.
அப்ப தங்கச்சியை ஏமாத்தின மாதிரி இப்பவும் ஏமாத்துவீங்களா?ஏமாத்தினதுக்கெல்லாம் கணக்குச் சரிபண்ண நீங்க தானே சீதனமாக் குடுப்பீங்க!
ஒரு நாள் தங்கைக்கு வாங்கிய மிட்டாய் என் வாய்க்குள் வந்துவிட்டது (நான் தான் போட்டுட்டேன்)\\
இரசித்தேன் ...
ரசித்தேன்
பாவம் உங்க தங்கச்சி.. ரொம்ப அப்பாவி போல..
இன்னிக்கும் உங்களை வெறுமனே திட்டிட்டு தான் இருக்காங்க. அடிக்காம :P
//ஒரு நாள் தங்கைக்கு வாங்கிய மிட்டாய் என் வாய்க்குள் வந்துவிட்டது (நான் தான் போட்டுட்டேன்)//
அதுவா கால் மொளச்சு வந்துதான்னு கேக்க வந்தேன். அதுக்குள்ள நீங்களே உண்மைய சொல்லிட்டீங்க :P
ரவுண்டா ஒரு பத்து :D
நீங்களுமா!!!!!
ஆனா நாங்க வேற விதத்தில ஏமாத்துவோம்... புளிப்பு மிட்டாய் சாப்பிட்டு எத்தனை நாள் ஆவுதுங்க..... அடடா... நாக்குல எச்சில் ஊற வெச்சிட்டீங்க போங்க.
இழந்தைப் பழம், பொடி.... கலாக்காய்.. பஞ்சுமிட்டாய் னு பல ஐட்டங்கள்... சின்னவயசு பதார்த்தங்கள்..... அத்தனையும் ஒருநிமிஷம் வந்து போவுது.. உங்க பதிவில...
வாழ்த்துக்களுங்கோவ்!!! (இது நம்ம பாஷை!)
@ஆளவந்தான்
//மீ த ஃபர்ஸ்ட்//
அது எப்டி பாஸ் ? உங்களாலயும், ஜமாலாளையும் மட்டும் முடியுது ?
//இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் கண்டிப்பா மொக்க போட முடியாதுங்க :) ஐ யாம் சாரி :)//
அப்பாடா.. தப்பிச்சாச்சு.
மிக்க நன்றி ஆளவந்தான், உங்களுக்கு தெரியாம இங்க எதாவது நடக்குமான்னு நெனச்சு சொல்லல வேற ஒன்னும் இல்ல.
@ஹேமா,
நன்றி ஹேமா,
//அப்ப தங்கச்சியை ஏமாத்தின மாதிரி இப்பவும் ஏமாத்துவீங்களா?//
ஏமாற்றியதாக நினைத்து ஏமாந்தது நானல்லவா ...
அந்த சிறுவயதில் அண்ணனுக்கு பிடிக்கும் என்பதற்காக - தன்னையே ஏமாற்றிக்கொள்ள தெரிந்தவள் என் தங்கை.
//ஏமாத்தினதுக்கெல்லாம் கணக்குச் சரிபண்ண நீங்க தானே சீதனமாக் குடுப்பீங்க!//
எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகுமானு தெரியல.
@ஜமால்,
மிக்க நன்றி ஜமால்.
@ஆனந்த்,
நன்றி ஆனந்த்.
//
//இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் கண்டிப்பா மொக்க போட முடியாதுங்க :) ஐ யாம் சாரி :)//
அப்பாடா.. தப்பிச்சாச்சு.
//
ஆஹா.. மீட்டிங் கிளம்பிகிட்டு இருக்கேனே...இல்லேனா.. ஒரு மொக்கைய போட்டுடலாம் :))
@G3
பத்து போட்ட G3 அவர்களே வாங்க வாங்க ...
வந்து என் தங்கைக்கு கொஞ்சம் சொல்லிகுடுங்க :))
பி கு: என்ன அடிக்க சொன்னதுக்கு - உங்களுக்கு அடி விழுந்தா நான் பொறுப்பு இல்ல, பிறகு உங்களுக்கு பத்து போடுறமாதிரி இருக்கும் பரவாயில்லையா ???
@ஆதவன்,
ஆதவன் - இரவி ரெண்டுமே சூரியனதான குறிக்குது ... அப்பறம் எப்டி வித்யாசம் இருக்கும் ?
அட ஆமால்ல, இலந்தஅடை, கமர்கட்டு, ஜவ்வு மிட்டாய், குச்சி ஐஸ், பால் ஐஸ் ... எனக்கும் எச்சில் ஊற வெச்சிட்டீங்க போங்க.
மிக்க நன்றி ஆதவன்.
//ஆஹா.. மீட்டிங் கிளம்பிகிட்டு இருக்கேனே...இல்லேனா.. ஒரு மொக்கைய போட்டுடலாம் :))//
ஒன்னும் குத்தமில்ல பொறுமையா போயிட்டு வாங்க,
நானும் வீட்டுக்கு வந்துடுறேன்.
இன்னாமே, நீ அவ்வளவு தில்லாலங்கடியா ..!!
எதுக்கும் இனிமே உன்னாண்ட கொஞ்சம் உஷாரா இருக்கணும்.
//ஆளவந்தான் said...
ஆமா.. பதிவு போட்ட விசயத்த ஏன் சொல்லவே இல்ல :)//
அதானே ஒரு போன் போட்டு சொல்லனும்ல!!
//அப்ப தங்கச்சியை ஏமாத்தின மாதிரி இப்பவும் ஏமாத்துவீங்களா?ஏமாத்தினதுக்கெல்லாம் கணக்குச் சரிபண்ண நீங்க தானே சீதனமாக் குடுப்பீங்க!//
இது ஜூப்பர் ஐடியா, உங்க வீட்டு செல் நம்பர் கொடுங்க.. கொஞ்சம் பேசணும் (போட்டுக் கொடுக்கணும்) !
//இழந்தைப் பழம், பொடி.... கலாக்காய்.. பஞ்சுமிட்டாய் னு பல ஐட்டங்கள்... சின்னவயசு பதார்த்தங்கள்..... அத்தனையும் ஒருநிமிஷம் வந்து போவுது.. உங்க பதிவில...//
ஸ்ஸ்ஸ்.. எச்சி ஊருது!!
//கணினி தேசம் said...
இன்னாமே, நீ அவ்வளவு தில்லாலங்கடியா ..!!
எதுக்கும் இனிமே உன்னாண்ட கொஞ்சம் உஷாரா இருக்கணும்.//
டூ லேட் ... உங்கவீட்டுக்கு வந்து, உங்களுக்கு வச்சிருந்த பயறு உருண்டைய புடுங்கி தின்னுட்டு வந்தப்பவே புரிஞ்சிருக்கணும்.
//கணினி தேசம் said...
அதானே ஒரு போன் போட்டு சொல்லனும்ல!!//
உங்க போன குடுங்க கீழ போட்டுட்டு, ஆளவந்தான் கிட்ட சொல்லுறேன்.
//கொஞ்சம் பேசணும் (போட்டுக் கொடுக்கணும்) !//
அவங்கவங்க வேலைய அவங்கவங்க தான் பாக்கணும் ...
அது என்னோட வேல ...
நல்லாத்தான் இருக்கு
(நான் புளிப்பு மிட்டாய சொன்னேன் ...
___ மோனி
அடுத்த பதிவு எப்போது தலைவா?
// mony said...
நல்லாத்தான் இருக்கு
(நான் புளிப்பு மிட்டாய சொன்னேன் ...
___ மோனி//
வாங்க மோனி வாங்க ...
முதல் வருகைக்கும் - தருகைக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வாங்க.
மிக்க நன்றி ஆனந்த்.