Author: - இரவீ -
•பிற்பகல் 2:32
புகைவண்டி நிலையத்துக்கு போய் வர புழக்கத்தில் உள்ள குறுகிய சாலை அது, அடுக்கு மாடி குடியிருப்புகள் அணிவகுத்து நிற்க, அதன் பாதசுவடான மகிழூந்து நிறுத்துமிடத்தில் வெள்ளை நிறத்தில் ஒன்றும், கருப்பு நிறத்தில் ஒன்றுமாய் அழகான இரண்டு நாய்குட்டிகள், குளிரின் கடுமையில் ஊமையாயிருந்தது வெள்ளை, கடுமை குளிரிலும் தம்மையும் தன் இனத்தையும் காக்க குரைத்தது கருப்பு.

அவ்விடம் வந்த ஆங்கிலத்தில் ஓரிரு வார்த்தை பயின்ற அண்ணனிடம் - வார்த்தை பயிலும் தங்கை குளறிக்கொண்டிருக்கும் நாயை சுட்டிக்காட்டி - முகபாவத்தால் ஏன் என கேட்க, அண்ணனிடம் இருந்து வந்த பதில் அசாத்தியமானது "The black Dog is so unhappy".
உண்மை குளிரோ அல்லது அச்சிறுவனின் குறும்போ நான் அறியேன், ஒன்று மட்டும் அறிந்தேன் - 'நிறத்தை கொண்டு தரம்பிறிக்கும் மனப்போக்கு - பச்சிளம் குழந்தைவரை பரவியுள்ளது'. இதை நினைக்கும் போது மனம்நொந்து போகிறது. இதை நேரில் பார்த்து என் தங்கை என்னிடம் கூறியபோது - நிஜம் நெஞ்சை அழுத்தியது...
|
This entry was posted on பிற்பகல் 2:32 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

22 கருத்துகள்:

On 13 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:54 , G3 சொன்னது…

Romba periya vishayaththa thammathoondu postla solliteenga !!

Return vandhadhum full formla erangiyaachu pola :)

 
On 13 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:29 , ஹேமா சொன்னது…

இரவீ,சின்ன விஷயமானாலும் மனம் பாதிக்கும் நிமிஷங்கள்.நிறபேதம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் சமம்போல.

இரவீ எழுத்துப்பிழைகள் இருக்கு கவனியுங்க.மகிழு(ழூ)ந்து,குல(ளறி)ரிக்கொண்டிருக்கும்,ஊம(மை)யாயிருந்தது

 
On 14 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 5:18 , Mathu சொன்னது…

Very touching. உலகத்தில் எங்கு போனாலும் ஒரு பாகுபாடு...ஒன்றும் கிடைக்காவிட்டால் நிறத்தில் பேதம்! இதை அழிக்கவே முடியாது....

 
On 16 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 12:31 , Ravee (இரவீ ) சொன்னது…

@G3
நன்றி G3 - இந்த நிகழ்வை நேரில் பார்த்து என் தங்கை என்னிடம் கூறியபோது - ரொம்ப கஷ்டமா இருந்தது. சரின்னு ஒரு பதிவா மாத்திட்டேன்.

 
On 16 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 12:32 , Ravee (இரவீ ) சொன்னது…

@ ஹேமா,
//நிறபேதம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் சமம்போல.//
கண்டிப்பா எனக்கு அப்படி தோனல ஹேமா - ஆறறிவை உபயோகிக்காத அறிவிலிகளிடம் மட்டுமே அது நிறைந்துள்ளது.

//இரவீ எழுத்துப்பிழைகள் இருக்கு //
சொன்னதை மட்டும் இப்போது திருத்திவிட்டேன்... மிக்க நன்றி.

 
On 16 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 12:32 , Ravee (இரவீ ) சொன்னது…

@நன்றி மது,
ஆமா இதை அழிக்கவே முடியாதா? யோசித்து ஒரு வழி சொல்லுங்களேன்.

 
On 16 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:44 , பெயரில்லா சொன்னது…

ஆமா இதை அழிக்கவே முடியாதா?
//
மனிதநேயம் தளைத்து ஓங்கினால் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். ஆனால் மனிதன் மனிதனாக மாறுவது எப்போது?

 
On 18 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 7:35 , நட்புடன் ஜமால் சொன்னது…

ரொம்ப நாளா காணோமே ...

 
On 18 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 7:36 , நட்புடன் ஜமால் சொன்னது…

\\'நிறத்தை கொண்டு தரம்பிறிக்கும் மனப்போக்கு - பச்சிளம் குழந்தைவரை பரவியுள்ளது\\

சரிதான் ...

 
On 18 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 7:37 , நட்புடன் ஜமால் சொன்னது…

\\மனிதநேயம் தளைத்து ஓங்கினால் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். ஆனால் மனிதன் மனிதனாக மாறுவது எப்போது?\\

சரியான சொல்.

 
On 18 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 7:57 , ஆதவா சொன்னது…

சகோதரி ஹேமா கூறியதைப் போன்று...

சின்ன விஷயமென்றாலும் அதன் உள்ளடக்கம் பெரிய பிரச்சனையைத் தோற்றுவிக்க வல்லவை...

நிறபேதங்கள் எவ்வடிவிலும், எவ்வுயிரிலும் காணக்கூடாதுதான்!!!! ஒரு சில நேரங்களைத் தவிர்த்து!!!!!

அதே, மனிதனிடம் சுத்தமாக நிறபேதம் காணக்கூடாது..

அழகிய பகிர்வு!!!! இன்னும் ஆழமாக எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

 
On 19 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 12:39 , Ravee (இரவீ ) சொன்னது…

வாங்க ஜமால், மிக்க நன்றி மற்றும் எனது இனிய வாழ்த்துக்கள் ...
(உங்க கவிதை - வார இதழில் வந்திருக்காமே...)

//ரொம்ப நாளா காணோமே ... //
ஊருக்கு - விடுமுறையில் வந்திருந்தேன் ஜமால் ...

 
On 19 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 12:44 , Ravee (இரவீ ) சொன்னது…

முதல் வருகைக்கும் - உள்ளார்ந்த கருத்துக்கும் மிக்க நன்றி ஆதவா.
ஆழ்ந்த வரிகளுக்கு கண்டிப்பாக முயற்சிக்கின்றேன்...

 
On 24 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:00 , ஹேமா சொன்னது…

எங்கே ஆளையே காணோம்.சுகம்தானே!

 
On 3 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 1:45 , Divya சொன்னது…

touchy post....:((

nuchchunu eluthirukireenga Ravee!

 
On 8 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 9:55 , newspaanai சொன்னது…

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

 
On 8 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 8:44 , ஆதவா சொன்னது…

என்னங்க... ரொம்ப நாளா ஒண்ணும் எழுதல???

நம்ம பதிவுக்கு வந்ததுக்கு நன்றி தல...

 
On 9 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 12:28 , பெயரில்லா சொன்னது…

அடுத்த பதிவு எப்போது தல?

 
On 9 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 2:00 , Ravee (இரவீ ) சொன்னது…

// Divya said...

touchy post....:((

nuchchunu eluthirukireenga Ravee!//
மிக்க நன்றி திவ்யா.

 
On 9 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 2:00 , Ravee (இரவீ ) சொன்னது…

//ஆதவா said...

என்னங்க... ரொம்ப நாளா ஒண்ணும் எழுதல???//

மிக்க நன்றி ஆதவன், இன்றே பதிவிடுகிறேன்.

 
On 9 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 2:01 , Ravee (இரவீ ) சொன்னது…

/கடையம் ஆனந்த் said...

அடுத்த பதிவு எப்போது தல?//
வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. புதிய பதிவு ரெடி.

 
On 9 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 2:01 , Ravee (இரவீ ) சொன்னது…

ஹேமா,
இப்ப சந்தோசம் தான, பதிவு போட்டாச்சு ...