Author: - இரவீ -
•முற்பகல் 1:35
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

"இரவீந்திரன்" - எனது அம்மா தேர்வு செய்த பெயர் .

பெயர் பிடிக்குமா ? நல்ல கேள்வி - இதுவரை நான் இதற்க்கு யோசித்தது இல்லை...
யோசிச்சு பார்த்தா... ரவி = சூரியன்; இந்திரன் = தேவலோக தலைவன் - "இ" ய தூக்கி முன்னால போட்டு "ரவி" தூக்கி நடுவில போட்டா... என் பேரு, பிறகு என்ன புடிச்சு தான இருக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

நெஞ்சு கனக்க நான் கண் கலக்கிய போது. (அது எப்பன்னு கேக்க கூடாது).

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்,
நாகேஷ் பிடிக்குமா, வடிவேல பிடிக்குமானு கேக்குற மாதிரி இருக்கு - ஏன்னா என் கையெழுத்தை பார்த்தா நான் கூட சிரிப்பேன். (ஆமாங்க அம்புட்டு கிறுக்கலா இருக்கும்).

4).பிடித்த மதிய உணவு என்ன?

உணவு - இது நம்ம ஏரியா...
தலைவாழை இலைபோட்டு, அதில் சூடான சாதம் போட்டு - பருப்பு, நெய் ஊற்றி - அந்த இலை மணத்துடன் சாப்பிட பிடிக்கும். (பருப்புக்கு பதிலா எங்க அம்மா வைக்கும் கதம்ப சாம்பார் போட்டு சாப்ட்டா - அட போங்கப்பா பிறவி எடுத்த பயனே முடிஞ்சிருச்சு அப்டீனு சொல்லுவீங்க).

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டுங்க... "சிலரை பார்த்ததும் பிடித்துவிடும் , சிலரை பார்த்தாலே பிடிக்காது". இன்னமும் இதுக்கு காரணம் தெரியல.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

சந்தேகமே இல்லாம அருவி ... உப்பு தண்ணீர் எப்படி வாசம் மிக்க நீரை எதிர்கொள்ள முடியும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

என்ன பாத்துகிட்டு இருந்தா அவங்க முகத்தை பார்ப்பேன், இல்லைனா மேலிருந்து பாதம் வரை நோட்டம் போகும்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?
பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: உடனே நம்பிவிடுவது.

பிடிக்காத விஷயம்: உடனே நம்பிவிடுவது.
(கோப்பி பேஸ்ட் தவறு எல்லாம் இல்ல - இரண்டுக்கும் ஒரே பதில் தான்).

9.உங்க "சரி பாதி" கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

மொதல்ல "சரி பாதி" யாருன்னு கண்டுபுடிச்சி சொல்லுங்க.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் நண்பர்கள் - அவர்களுடன் இருக்கும் போது உலகம் எனக்கொரு சுண்டைக்காய்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளை.

12.என்ன கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நண்பனின் குறட்டை சப்தம், இளையராஜாவையும் மீறி என் காதுக்குள். (தாங்கலடா சாமி ...)

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை ?

ஊதா அல்லது பிங்க்.

14.பிடித்த மனம் ?

நிறைய இருக்கு - கொஞ்சம் உங்களுக்காக ...
- தாழம்பூ வாசனை,
- சித்தனாதன் திருநீர் வாசனை,
- மாலையில் மொட்டு வெடிக்கும் பீர்க்கம்பூவின் வாசனை.
- புது புத்தகம் வாசனை,
- மீரா சீயக்காய் தூள் போட்டு தலை குளித்த வாசனை.
- வெண்ணை உருக்கி நெய் எடுக்கும் போது முடிவில் முருங்கை கீரை கொழுந்தை அதில் போடுவார்கள் 'அப்ப வரும் பாருங்க ஒரு வாசனை' ம்ம்ம்ம்...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவர்களிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்.
அவரை அழைக்கக் காரணம் என்ன ?

1) இவரோட பதிவ என் பதிவாவே தான் நான் பார்ப்பேன் - ஏன்னா அந்த அளவுக்கு எனது சிந்தனை அவருடைய வரிகளில் இருக்கும், இவரை இவரோட மந்திரிக்கு கிடைத்த ஆப்பு மற்றும் கருவறையும் இருட்டறையும் பதிவில் தான் முதலில் சந்தித்தேன்.

2) இவரு கொஞ்சம் வித்யாசமான ஆளு - பாருங்க யாரு இவருன்னு ... இவரோட
உலகின் வித்தியாசமான திருவிழாக்கள் 1 & 2 எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு.
அந்த குரங்கு திருவிழா சூப்பரு.

3) இவரோட திருந்தி தொலைங்கடா வில் அறிமுகமாகி - இந்த படம் பாக்கலாமா வேணாமான்னு.... இவர் பதிவை போய் பார்க்கவச்ச பதிவர்.

4) இவங்க ஒரு கும்மி கூட்டத்தின் தலைவி, இவங்களோட கலாட்டா டைம் 1 அறிமுகம் கொடுத்தது ... அப்பறம் தான் தெரிஞ்சது - இவங்களும் நம்ம மாதிரி ஆளுன்னு (அதாங்க அந்த சாப்பாட்டு விஷயத்துல).

5) இவரோட கவிதைகள் எளிமையா இனிமையா இருக்கும், மிக சுலபமா வார்த்தைகளுடன் விளையாடுவார் - எந்த சிறு உணர்வையும் கவித்துவத்தோட பார்த்திருப்பார் - எனக்கு மிக மிக பிடித்த கவிதாசிரியரில் ஒருவர். இவரோடத்தில் எதை வேணும்னாலும் படிச்சு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

6) இவருடைய கருத்துக்கள் எனக்கு மிகவும் ஒத்து போவதால் இவரை ரொம்ப பிடிக்கும், யாரா? சூரியனை இங்கு சொடுக்கவும்.

7) கும்மியடிச்சலும் இவர மாதிரி யாரும் கும்மியடிக்க முடியாது - மிகவும் ஜாலியான மனிதர், இவர் பார்த்த பின்புதான் ஹாலிவுட் படம் எல்லாம் ரிலீஸ் பண்ணுவாங்க. ஆனா இவர் அங்கபோய் என்ன பக்குரார்னு யாருக்கு தெரியும்???.

இவங்க எல்லோரையும் அழைக்க காரணம் - அவர்களை தெரிந்துகொள்ள ஆர்வம் .

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்
பிடித்த பதிவு எது?

பிடிக்காதது எதுன்னா பட்டுன்னு ஒன்னும் இல்லைன்னு சொல்லிடலாம், பிடிச்சது எதுன்னா நிறைய இருக்கே ... ஒப்பீடு சொல்லனும்னா ஹேமாவின் உப்புமட சந்தியை விட
குழந்தைநிலா எனக்கு மிகவும் பிடித்த தளம், இந்த தளம் எனது கணினியில் அதிக நேரம் திறந்திருக்கும் தளம் கூட.


17. பிடித்த விளையாட்டு ?

எல்லா விளையாட்டும் பாக்க பிடிக்கும்னாலும், ஜிம்னாஸ்டிக் மேல பிரியம் அதிகம், அதுவும் சென்ற ஒலிம்பிக்கில் பார்த்த வாட்டர் ஜிம்னாஸ்டிக்... அம்மாடியோ...இன்னும் கண்ணுல நிக்குது.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லேங்க, சும்மா போஸ் குடுக்க குளிர் கண்ணாடி எப்பவாவது போடுவதுண்டு.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ஒன்னு நல்ல கதை இருக்கணும், இல்லை நல்ல நகைச்சுவை இருக்கணும் - (இதெல்லாம் இல்லைனா நான் ஏன் அங்க இருக்கணும்).

20.கடைசியாகப் பார்த்த படம்?

"ஸ்லம் டாக் மில்ளிநிஒர்" - இதுக்கா 8 ஓஸ்கார் ?

21.பிடித்த பருவ காலம் எது?

கூதிர் காலம்.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க ?

அந்த கெட்ட பழக்கம் எல்லாம் கிடையாது ...

23.உங்கள் டெச்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு வரைமுரையே கிடையாது ... குட்டி பாப்பாஸ், பில்கேட்ஸ் பொண்ணு, ஐஸ்வர்யா ராய், புதுசா வந்த நடிகை, நாய்க்குட்டி, ஆகாயவிமானம், பூ, என மாறிக்கிட்டே இருக்கும்... ஒரு காலவரை அற்று.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : மழலை, சினுங்கள், புல்லாங்குழல்.
பிடிக்காத சத்தம்: அழுகை, சிலர் சாப்பிடும் போது எழுப்பும் (இப்ச் பிச் ...).

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு ?

நெதர்லாந்த்(NL), மிக அருமையான நாடு.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிறைய விஷயம் தெரிஞ்சுக்கணும்னு நினைப்பேன் - அதன் விளைவு நான் பெற்ற பத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ், ஒரு டிப்ளமோ, ஒரு முதுகலை டிப்ளமோ, இரண்டு இளநிலை பட்டம் மற்றும் இரண்டு முதுகலை பட்டம்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.

நம்பிக்கை துரோகம். (அதற்க்கு மன்னிப்பே கிடையாது).

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்.

9.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

பசுமையான மலையும் மலையை சார்த்த இடமும் ரொம்ப பிடிக்கும், இருந்தாலும்
சிம்லா - டார்ஜிலிங் ஒரு முறை போய் பார்க்கணும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

வள்ளலார், விவேகானந்தர் மாதிரி ... இல்லாட்டியும் அவங்க சொன்ன சில விஷயங்கள செய்யனும்னு ஒரு ஆசை.

31.மனைவி(கணவர்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் !

மொதல்ல அவங்க வரட்டும், அப்பறம் அவங்கள கேட்டு சொல்லுறேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

"எடுத்து செல்ல எதுவும் இல்லை - விட்டு செல்லுங்கள்".விதி முறை
.மூணு பேரை மட்டுமே அழைக்கலாம்.
.இந்த அழைப்பு மணி எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்க்க உங்களுக்கு முன்னால் அழைக்கப்பட்ட 5 பேரின் பெயரைப் போட வேண்டும்.

நான் அழைப்பது : (பொன்னாத்தா வின் விட்டுப்போன 2 பேர் + ஹேமாவின் விட்டுப்போன 2 பேர் + என்னுடைய 3 பேர் ஆகா மொத்தம் 7 பேர்)

நட்புடன் ஜமால்:

கணினி தேசம்:

கடையம் ஆனந்த்:

G3 :

புதியவன்:

ஆதவா :

ஆளவந்தான்:

இன்னைக்கு நிம்மதியா தூங்குவேன் - 7 பேர மாட்டிவிட்டாச்சுல.

எனது நன்றி: என்னை மாட்டிவிட்ட

உப்புமடச் சந்தி - ஹேமா மற்றும்
நிலாவும் அம்மாவும் -(எ)பொன்னாத்தா சண்டைக்கோழி.
ஆகியோருக்கு.
|
This entry was posted on முற்பகல் 1:35 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

73 கருத்துகள்:

On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 3:45 , நசரேயன் சொன்னது…

உள்ளேன் ஐயா

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 3:46 , நசரேயன் சொன்னது…

//(ஆமாங்க அம்புட்டு கிறுக்கலா இருக்கும்).//
தலை எழுத்து மாதிரியா?

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 3:47 , நசரேயன் சொன்னது…

//பிடிக்காதது எதுன்னா பட்டுன்னு ஒன்னும் இல்லைன்னு சொல்லிடலாம், பிடிச்சது எதுன்னா நிறைய இருக்கே ... ஒப்பீடு சொல்லனும்னா ஹேமாவின் உப்புமட சந்தியை விட குழந்தைநிலா எனக்கு மிகவும் பிடித்த தளம், இந்த தளம் எனது கணினியில் அதிக நேரம் திறந்திருக்கும் தளம் கூட//

ஆமா.. ஆமா .. அங்கே தானே வகை..வகையா கும்மி அடிக்கலாம்

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 3:55 , Ravee (இரவீ ) சொன்னது…

வாங்க வாங்க நசரேயன்,
முதல் போனி நீங்கதான்.

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 3:55 , ஆளவந்தான் சொன்னது…

technically me the second :))

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 3:56 , Ravee (இரவீ ) சொன்னது…

ஆளவந்தான் அது எப்படி ???

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 3:58 , ஆளவந்தான் சொன்னது…

இருக்கியா ராசா..:))

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 4:02 , ஆளவந்தான் சொன்னது…

//
Ravee (இரவீ ) said...

ஆளவந்தான் அது எப்படி ???

//

அதுவா.. நச்ரேயன் ஃபர்ஸ்ட்.. உங்கள கணக்குல சேக்க கூடாது.. .அப்போ நாந்தேன் ரெண்டாவது.. ஸ்ஸ்ஸ்.. இதுக்கு விளக்கமா நான் ஒரு பதிவே போட்டிருக்கலாம் :))

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 4:03 , ஆளவந்தான் சொன்னது…

மத்ததெல்லாம் எங்க பதிவுல் எழுதிடுறோம் :))

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 4:21 , Ravee (இரவீ ) சொன்னது…

//ஆளவந்தான் said...

மத்ததெல்லாம் எங்க பதிவுல் எழுதிடுறோம் :))//

வாழ்த்துகள்.

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 4:23 , Ravee (இரவீ ) சொன்னது…

////நசரேயன் said...
(ஆமாங்க அம்புட்டு கிறுக்கலா இருக்கும்).//
தலை எழுத்து மாதிரியா?//

அதைவிட கம்மியான கிறுக்கல் தான்.

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 4:33 , நட்புடன் ஜமால் சொன்னது…

ஆஹா!

கண்டுகொண்டேன் தங்கள் பெயரை

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 4:34 , நட்புடன் ஜமால் சொன்னது…

இரவீ உங்களின் பாசம் மெய்யாகவே சிலிர்க்க வைத்தது மெய்யை.

இவ்வளவு அழகான வார்த்தையில் என்னை பற்றி சொல்லியிருக்கின்றீர்கள்

நெகிழ்வாய் இருக்கின்றது.

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 4:35 , ஆளவந்தான் சொன்னது…

வாங்க ஜமால்

என்னையும் ரொம்ப நல்லவனு மாறி.. மாறி புகழ்ந்து தள்ளியிருகாருங்க :)))))

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 4:41 , நட்புடன் ஜமால் சொன்னது…

நீங்கள் முதன் முதலில் போட்ட விமர்சணம் என மனதில் பல முறை வந்து செல்லும்

அதன் விளைவாக நான் பல எழுத நினைத்திருக்கிறேன்

இருப்பினும் ஒன்று எழுதியிருந்தேன்.
(என்னை(யும்) கவர்ந்தவர்)

இன்னும் முயற்சிகள் தொடரும் அயற்சியில்லாமல்

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 4:41 , நட்புடன் ஜமால் சொன்னது…

நீங்க நல்லவர்தானே ஆளவந்த்ஸ்

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 4:46 , நட்புடன் ஜமால் சொன்னது…

ஆனாலும் இவ்வளவு நல்லதா சொல்லிப்போட்டு

மாட்டி உட்டு போட்டியள்

ஏற்கனவே 3 டாக் மிச்சமிருக்கு

அது எப்போ முடிய
இது எப்போ விடிய

எப்படியும் இந்த வருடத்துக்குள்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 4:54 , ஆளவந்தான் சொன்னது…

//
நட்புடன் ஜமால் said...
நீங்க நல்லவர்தானே ஆளவந்த்ஸ்
//

இன்னுமா இந்த ஊரு என்ன நம்புது :))))

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 6:07 , Ravee (இரவீ ) சொன்னது…

@ஜமால்,
வாங்க வாங்க ஜமால் - மிக்க நன்றி.
உங்கள் பின்னூட்டம் பூரிப்பை தருகின்றது.

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 7:33 , புதியவன் சொன்னது…

இரவீ...உங்களுக்குப் பிடித்தவர்கள் வரிசையில் என்னையும் சேர்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்...

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 7:34 , புதியவன் சொன்னது…

உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கு ரசித்துப் படித்தேன்...

என்னையும் டேக் பண்ணியிருக்கீங்க...
இபோதைக்கு கொஞ்சம் வேலை அதிகம் எனினும்
விரைவில் பதிவிடுகிறேன்...நன்றி இரவீ...

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 8:09 , ஆதவா சொன்னது…

படிச்சாச்சு!!!!

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 8:13 , ஆதவா சொன்னது…

வாசனை குறித்த உங்கள் பதிலை ரசித்தேன்...

என்னுடைய பேரை சேர்த்தியிருக்கீங்க... (அடப்பாவமே!)

எப்படி விளையாடுவது?? (இதென்ன கேமான்னு நீங்க கேட்பது புரிகிறது)

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:15 , G3 சொன்னது…

//யோசிச்சு பார்த்தா... ரவி = சூரியன்; இந்திரன் = தேவலோக தலைவன் - "இ" ய தூக்கி முன்னால போட்டு "ரவி" தூக்கி நடுவில போட்டா...//

ரொம்ப யோசிக்காதீங்க.. உடம்புக்கு நல்லதில்லை.. யார் உடம்புக்குனு எல்லாம் விசாரிக்க கூடாது :)

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:15 , G3 சொன்னது…

25 நானே :D

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:20 , G3 சொன்னது…

//அது எப்பன்னு கேக்க கூடாது//

சரி.. கேட்கலை :)

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:21 , G3 சொன்னது…

//ஆமாங்க அம்புட்டு கிறுக்கலா இருக்கும்//

நீங்க டாக்டராகி இருக்க வேண்டியவரோ :P

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:22 , G3 சொன்னது…

//
உணவு - இது நம்ம ஏரியா... //

ஹிஹி.. ரிப்பீட்டே :)))

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:23 , G3 சொன்னது…

//
மொதல்ல "சரி பாதி" யாருன்னு கண்டுபுடிச்சி சொல்லுங்க.//

:)))))))))))))))))

இதை கூட நீங்களா கண்டுபிடிச்சிக்க மாட்டீங்களா ?? !!

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:27 , G3 சொன்னது…

//இவங்க ஒரு கும்மி கூட்டத்தின் தலைவி//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:27 , G3 சொன்னது…

//ஆனா இவர் அங்கபோய் என்ன பக்குரார்னு யாருக்கு தெரியும்???//

அதைத்தான் அவரு பதிவுலயே தெளிவா ஜொல்லிடறாரே :)))

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:32 , G3 சொன்னது…

டேக் பண்ணினதுக்கு ரொம்ப நன்றி :) மத்தவங்கள மாதிரி எல்லாம் அப்புறம் போடறேன்னு சொல்லமாட்டேன். இப்பவே எழுதறேன் உங்க டேக்க :)))

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 1:17 , G3 சொன்னது…

பதிவு போட்டாச்சு :)))

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 2:07 , Poornima Saravana kumar சொன்னது…

இந்த பக்கம் வந்து நெம்ப நாட்களாகி விட்டது:((((

எல்லாத்துக்கும் காரணம் ஒன்னே ஒன்னு தான்:))))

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 2:07 , Poornima Saravana kumar சொன்னது…

3+2(2)=32 ஏன்னா??? கேட்பது சுலபம் - பதில் சொல்லுவது கஷ்டம்
//
எப்படீங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க!!!!

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 5:21 , MayVee சொன்னது…

super ppa.....

ithuthaan naan unga padivula podura muthal pinnottam....


ungalai pathi naala therinthu kolla mudinthathu ....

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 5:22 , MayVee சொன்னது…

"நசரேயன் said...
//பிடிக்காதது எதுன்னா பட்டுன்னு ஒன்னும் இல்லைன்னு சொல்லிடலாம், பிடிச்சது எதுன்னா நிறைய இருக்கே ... ஒப்பீடு சொல்லனும்னா ஹேமாவின் உப்புமட சந்தியை விட குழந்தைநிலா எனக்கு மிகவும் பிடித்த தளம், இந்த தளம் எனது கணினியில் அதிக நேரம் திறந்திருக்கும் தளம் கூட//

ஆமா.. ஆமா .. அங்கே தானே வகை..வகையா கும்மி அடிக்கலாம்"

periya repeat......

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 5:23 , MayVee சொன்னது…

"நசரேயன் said...
உள்ளேன் ஐயா"

naanum thaanunga ullen aiyya

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 5:24 , MayVee சொன்னது…

"Poornima Saravana kumar said...
3+2(2)=32 ஏன்னா??? கேட்பது சுலபம் - பதில் சொல்லுவது கஷ்டம்
//
எப்படீங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க!!!!"

periya intelligent ellam appadi think pannuvanga boss ....

arasiyal la ithu ellam sagajam ppaa

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 5:27 , MayVee சொன்னது…

""3+2(2)=32 ஏன்னா??? கேட்பது சுலபம் - பதில் சொல்லுவது கஷ்டம்.""


appadi ellam illappaa...
naanga ellam bharathidasan university, anna university matrum oxford university ketta kelvikku ellam pathil solli irukkom ppaaa

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 5:27 , MayVee சொன்னது…

me th 41

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 5:28 , MayVee சொன்னது…

and aLSO ME TH 42ND

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 6:50 , ஹேமா சொன்னது…

//3+2(2)=32 ஏன்னா??? கேட்பது சுலபம் - பதில் சொல்லுவது கஷ்டம்//

இரவீ,என்னாலதான் நம்ம நண்பர்களைக் குழப்ப முடிலன்னு உஙகிட்ட ஒரு பொறுப்பான விஷயத்தை உங்க கையில குடுத்தா தலையங்கமே இப்பிடி ஒரு குழப்பமா?என்னோட நிறைய நணபர்கள் உஙகிட்ட சிக்கிக்கிட்டாங்க.
பாவம்.

******************************
"இரவீந்திரன்" சூடான பெயர்.

******************************
சாப்பாடு-இப்பிடி ஒரு சாப்பாட்டுப் பிரியரா !
***********************************
//என்ன பாத்துகிட்டு இருந்தா அவங்க முகத்தை பார்ப்பேன், இல்லைனா மேலிருந்து பாதம் வரை நோட்டம் போகும்.//

இது என்ன கூடாத பழக்கம்

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 7:05 , ஹேமா சொன்னது…

//மொதல்ல "சரி பாதி" யாருன்னு கண்டுபுடிச்சி சொல்லுங்க.//

இரவீ உங்க பயோடேட்டா தாங்க.குழந்தைநிலாவில பதிவாப் போட்டு உங்க சரிபாதியைக் கண்டு பிடிச்சிடலாம்.நல்ல யோசனைதானே !

// மீரா சீயக்காய் தூள் போட்டு தலை குளித்த வாசனை.
- வெண்ணை உருக்கி நெய் எடுக்கும் போது முடிவில் முருங்கை கீரை கொழுந்தை அதில் போடுவார்கள் 'அப்ப வரும் பாருங்க ஒரு வாசனை' ம்ம்ம்ம்...//

எனக்கும் பிடித்த மணம்.ஆனா அனுபவிச்சு 10- 15 வருஷங்களுக்கு மேல ஆச்சு.

 
On 21 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 7:07 , ஹேமா சொன்னது…

// நிறைய விஷயம் தெரிஞ்சுக்கணும்னு நினைப்பேன் - அதன் விளைவு நான் பெற்ற பத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ், ஒரு டிப்ளமோ, ஒரு முதுகலை டிப்ளமோ, இரண்டு இளநிலை பட்டம் மற்றும் இரண்டு முதுகலை பட்டம்.//

இரவீ,நிறையப் படிச்சிருக்கீங்க.சந்தோஷமா இருக்கு.
பொறாமையாவும் இருக்கு.எனக்குக் கொடுத்து வைக்காத விஷயத்தில ஒண்ணு படிப்பு.

உங்க சாத்தான்"சோம்பேறித்தனத்தை" எனக்கு எப்போவோ நான்
"கண்டுகொண்டேன்"
உங்க பதிவுகளில் இருந்து.

//என்ன கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நண்பனின் குறட்டை சப்தம், இளையராஜாவையும் மீறி என் காதுக்குள். (தாங்கலடா சாமி ...)//

சிரிச்சு முடில.யார்...அங்கே.அந்தக் குறட்டை நண்பனைப் பிடித்துக் கொஞ்சம் தாருங்கள்.இரவியின் தூக்கம் கலைக்கும் அவரை ஒவ்வொரு நாளும் ஒரு
10 நிமிடங்கள் சுவிஸ் ஐஸ் மலைக்குள் நிப்பாட்டப் போகிறேன்.

 
On 22 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 1:54 , Ravee (இரவீ ) சொன்னது…

@ புதியவன் ,

எனக்கும் மிக்க மகிழ்ச்சி புதியவன்,


// உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கு ரசித்துப் படித்தேன்...//
மிக்க நன்றி.

// என்னையும் டேக் பண்ணியிருக்கீங்க...
இபோதைக்கு கொஞ்சம் வேலை அதிகம் எனினும்
விரைவில் பதிவிடுகிறேன்...நன்றி இரவீ...//
நன்றி புதியவன்.

 
On 22 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 1:54 , Ravee (இரவீ ) சொன்னது…

@ ஆதவன்,

// படிச்சாச்சு!!!!//
// வாசனை குறித்த உங்கள் பதிலை ரசித்தேன்...//
மிக்க நன்றி.

// என்னுடைய பேரை சேர்த்தியிருக்கீங்க... (அடப்பாவமே!)
எப்படி விளையாடுவது?? (இதென்ன கேமான்னு நீங்க கேட்பது புரிகிறது)//
பூந்து விளையாடுங்க.

 
On 22 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 1:55 , Ravee (இரவீ ) சொன்னது…

@ G3.

// ரொம்ப யோசிக்காதீங்க.. உடம்புக்கு நல்லதில்லை.. யார் உடம்புக்குனு எல்லாம் விசாரிக்க கூடாது :)//
ரைட்டு .. விடுங்க.

// 25 நானே :D//
நீங்களே நீங்களே ...

// சரி.. கேட்கலை :)//
இப்பல்லாம் ரொம்ப சமத்தாயிடீங்க தெரியுமா ???

// நீங்க டாக்டராகி இருக்க வேண்டியவரோ :P//
அது கூட உண்மை தான ... மூலிகை மற்றும் காந்த மருத்துவத்தில் டிப்ளோமோ வச்சிருக்கோம்ல .... (என்ன கொடும சரவணன்).

// // மொதல்ல "சரி பாதி" யாருன்னு கண்டுபுடிச்சி சொல்லுங்க.//

:)))))))))))))))))

இதை கூட நீங்களா கண்டுபிடிச்சிக்க மாட்டீங்களா ?? !!//

குட் குவச்டீன் ... நெக்ஸ்ட் மீட் பண்ணறேன்.

// //இவங்க ஒரு கும்மி கூட்டத்தின் தலைவி//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
உண்மை தான ???

// அதைத்தான் அவரு பதிவுலயே தெளிவா ஜொல்லிடறாரே :)))//
உண்மைய போட்டு உடைச்சிட்டீங்களே....

// டேக் பண்ணினதுக்கு ரொம்ப நன்றி :) மத்தவங்கள மாதிரி எல்லாம் அப்புறம் போடறேன்னு சொல்லமாட்டேன். இப்பவே எழுதறேன் உங்க டேக்க :)))//

நான் சொல்லல .... G3 ரொம்ப நல்ல பொண்ணுன்னு.

// பதிவு போட்டாச்சு :)))//
அட இங்க பாருடா ... என்ன ஒரு வேகம்.

 
On 22 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 1:56 , Ravee (இரவீ ) சொன்னது…

@Poornima Saravana kumar ,

// இந்த பக்கம் வந்து நெம்ப நாட்களாகி விட்டது:((((

எல்லாத்துக்கும் காரணம் ஒன்னே ஒன்னு தான்:))))//
பதிவு போட மாட்டேங்குரத எப்படி எல்லாம் சொல்லுறாங்கப்பா ...
வருகைக்கு நன்றி .

//// 3+2(2)=32 ஏன்னா??? கேட்பது சுலபம் - பதில் சொல்லுவது கஷ்டம்
//
எப்படீங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க!!!!//

அதுவா வருது ...

 
On 22 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 1:57 , Ravee (இரவீ ) சொன்னது…

@ MayVee

//super ppa.....

ithuthaan naan unga padivula podura muthal pinnottam....


ungalai pathi naala therinthu kolla mudinthathu ....//
வாங்க வாங்க மைய்வீ..
முதல் வருகைக்கு மிக்க நன்றி ... தொடர்ந்து வாங்க.

// naanum thaanunga ullen aiyya//
அவ்வ்வ்வ்வ்வ்வ் ....

// periya intelligent ellam appadi think pannuvanga boss ....

arasiyal la ithu ellam sagajam ppaa//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ...

// appadi ellam illappaa...
naanga ellam bharathidasan university, anna university matrum oxford university ketta kelvikku ellam pathil solli irukkom ppaaa//

பதில் சொன்னீங்க சரி , பாஸ் பண்ணீங்களா ?

 
On 22 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 1:59 , Ravee (இரவீ ) சொன்னது…

@ஹேமா

// இரவீ,என்னாலதான் நம்ம நண்பர்களைக் குழப்ப முடிலன்னு உஙகிட்ட ஒரு பொறுப்பான விஷயத்தை உங்க கையில குடுத்தா தலையங்கமே இப்பிடி ஒரு குழப்பமா?என்னோட நிறைய நணபர்கள் உஙகிட்ட சிக்கிக்கிட்டாங்க.
பாவம்.//
ஹேமா, நீங்க சொன்னமாதிரியே செஞ்சுட்டேன், யார் யார கூப்பிட சொன்னீங்களோ கூப்பிட்டாச்சு, நீங்க குடுத்த தலையங்கம் - பதில் எல்லாம் சரியா போட்டிருக்கேனான்னு சொல்லவே இல்லையே.

// "இரவீந்திரன்" சூடான பெயர்.//
ஏன் இவ்வளவு சூடா இருக்கீங்க ?

// சாப்பாடு-இப்பிடி ஒரு சாப்பாட்டுப் பிரியரா !//
ஹி ஹி ஹி .... ஆமா.

// இது என்ன கூடாத பழக்கம்//
பாக்குறது தப்பா? ஒரு அழகான மலை, மயில், அருவி, பசுமை மற்றும் எவ்வளவோ உள்ள இறைவனின் படைப்பை பார்த்து ரசிக்கும் நமக்கு "மனிதர்களை ரசிப்பது தவறாக தெரிவது ஏன்?"

மக்களே.. நிறைய பதிவு இந்த தலைப்பில் எதிர்பார்க்கிறேன்.

// இரவீ உங்க பயோடேட்டா தாங்க.குழந்தைநிலாவில பதிவாப் போட்டு உங்க சரிபாதியைக் கண்டு பிடிச்சிடலாம்.நல்ல யோசனைதானே !//

இந்த பதிவுக்கு கும்மி மட்டுமே கிடைக்கும் - பரவாயில்லையா உங்களுக்கு?

// இரவீ,நிறையப் படிச்சிருக்கீங்க.சந்தோஷமா இருக்கு.
பொறாமையாவும் இருக்கு.எனக்குக் கொடுத்து வைக்காத விஷயத்தில ஒண்ணு படிப்பு.//
இன்னும் ஒன்றும் குறைந்துவிடவில்லை ... இப்போது நினைத்தால் கூட நீங்க படிக்கலாம்.

// உங்க சாத்தான்"சோம்பேறித்தனத்தை" எனக்கு எப்போவோ நான்
"கண்டுகொண்டேன்"
உங்க பதிவுகளில் இருந்து.//

அது சரி.

// சிரிச்சு முடில.யார்...அங்கே.அந்தக் குறட்டை நண்பனைப் பிடித்துக் கொஞ்சம் தாருங்கள்.இரவியின் தூக்கம் கலைக்கும் அவரை ஒவ்வொரு நாளும் ஒரு
10 நிமிடங்கள் சுவிஸ் ஐஸ் மலைக்குள் நிப்பாட்டப் போகிறேன்.//

உங்க பதிலுக்கே ஒரு பயம் வந்திட்டது போல ... இன்று சத்தம் காணோம்.

 
On 22 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 7:32 , MayVee சொன்னது…

"Ravee (இரவீ ) said...
@ MayVee
// appadi ellam illappaa...
naanga ellam bharathidasan university, anna university matrum oxford university ketta kelvikku ellam pathil solli irukkom ppaaa//

பதில் சொன்னீங்க சரி , பாஸ் பண்ணீங்களா ?"

public... public.....
he he he he
athellama mukiyam....
degree vanthuchula athu pothumppaa

 
On 22 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 7:39 , MayVee சொன்னது…

"Ravee (இரவீ ) said...
@ஹேமா
// இது என்ன கூடாத பழக்கம்//
பாக்குறது தப்பா? ஒரு அழகான மலை, மயில், அருவி, பசுமை மற்றும் எவ்வளவோ உள்ள இறைவனின் படைப்பை பார்த்து ரசிக்கும் நமக்கு "மனிதர்களை ரசிப்பது தவறாக தெரிவது ஏன்?"

மக்களே.. நிறைய பதிவு இந்த தலைப்பில் எதிர்பார்க்கிறேன்."

vidunga boss.....
youth manasai yaarum puringikka mattanga.....

 
On 22 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 4:49 , ஹேமா சொன்னது…

//என்ன பாத்துகிட்டு இருந்தா அவங்க முகத்தை பார்ப்பேன், இல்லைனா மேலிருந்து பாதம் வரை நோட்டம் போகும்.//

ஏன் /கூடாத பழக்கம்/ன்னு சொன்னேன் என்றால் ஒருவர் அவருக்கு முன்னால் நிற்கும்போது அவர் தலையில் இருந்து கால் வரை பார்வையை ஓடவிட்டால் முன்னால் நின்று கதைக்க கூச்சமாய் இருக்கும்.அதுக்குத்தான் சொன்னேன்.

இரவீ,கேள்விக்குண்டான பதில்கள் உங்கள் மனதோடு ஒட்டி வந்திருக்கு.
இதில் நல்லது-கூடாது சொல்ல முடியாது.ஒவ்வொருவரின் இயல்பு வாழ்வின் பதில்கள்.ஆனால் என்னப்போல ஏன் உம்...என்று எழுதியிருக்கிறீர்கள்.நகைச்சுவை போதாது.பாருங்க எத்தனை பேர் நகைச்சுவையோடு கலக்கப் போகிறார்கள்.

 
On 23 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:34 , பெயரில்லா சொன்னது…

நண்பா என்னையும் கூப்பிட்டு இருக்கீங்களா? உடனே பாருங்க நம்ப பதிவை. போட்டாச்சுல.

 
On 24 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:38 , வால்பையன் சொன்னது…

படிக்க சுவாரஸ்யமாக இருந்தது நண்பரே!
நீங்கள் அழைத்த நண்பர்களின் பதிகளை தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளேன்!

 
On 24 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 8:57 , Ravee (இரவீ ) சொன்னது…

//MayVee said...
public... public.....
he he he he
athellama mukiyam....
degree vanthuchula athu pothumppaa//
மீ... தி.. சாரி ...

 
On 24 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 8:59 , Ravee (இரவீ ) சொன்னது…

@ ஹேமா
// இதில் நல்லது-கூடாது சொல்ல முடியாது.//
அப்படிஎல்லாம் இல்லை ... நல்லா சொல்லுங்க.

 
On 24 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 8:59 , Ravee (இரவீ ) சொன்னது…

@ கடையம் ஆனந்த்,

// நண்பா என்னையும் கூப்பிட்டு இருக்கீங்களா? உடனே பாருங்க நம்ப பதிவை. போட்டாச்சுல.//
நன்றி ஆனந்த்.

 
On 24 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 8:59 , Ravee (இரவீ ) சொன்னது…

@ வால்பையன்,

மிக்க நன்றி வால்பையன்.

 
On 25 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 8:25 , ஆதவா சொன்னது…

ரவீ!! இந்த கேள்விகளை யார் கேட்பார்கள்? நானே கேட்டு பதில் எழுதவேண்டுமா.. அல்லது உங்கள் கேள்வியை காப்பி பண்ணவா?

உண்மையிலேயே எனக்குத் தெரியாதுங்க

 
On 26 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 7:47 , தமிழ்நெஞ்சம் சொன்னது…

Are you from Srilanka?

அங்கே இருப்பவங்க தான் Copy அப்படிங்கிறதை கோப்பி அப்படின்னுவாங்க. சரிதானே!

/(கோப்பி பேஸ்ட் தவறு எல்லாம் இல்ல - இரண்டுக்கும் ஒரே பதில் தான்).

 
On 26 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 8:35 , Ravee (இரவீ ) சொன்னது…

//ஆதவா said...

ரவீ!! இந்த கேள்விகளை யார் கேட்பார்கள்? நானே கேட்டு பதில் எழுதவேண்டுமா.. அல்லது உங்கள் கேள்வியை காப்பி பண்ணவா?//

கேள்விகளை மட்டும் காப்பி பன்னுங்க ... பதில சேர்த்துடுங்க. :)

 
On 26 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 8:36 , Ravee (இரவீ ) சொன்னது…

வாங்க வாங்க தமிழ்நெஞ்சம்,
முதல் வருகைக்கு மிக்க நன்றி.
தமிழ் நாடு தாங்க, "COPY" அப்டீனு கூகிள் டிரான்சிலேட் ல அடிச்சப்ப வந்ததுதான் இந்த கோப்பி - அத அப்படியே போட்டுட்டேன், (காரணம் என்னவோ என் ஈழ நண்பர்கள் இந்த வார்த்தையை அப்படி உபயோகிப்பதால் தான்).

 
On 5 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 7:46 , நிலாவும் அம்மாவும் சொன்னது…

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடும் ஞானத் தங்கமே. ...

உங்க பதிவுக்கு வராமலே, இவ்வளவு நாளும் நீங்க சோம்பேறி..இன்னும் கேள்வி பதில் பதிவு போடலன்னு நினச்சுட்டு இருந்தேன்

மன்னிச்சுக்கங்க ...

கேள்வி பத்தி எல்லாமே நகைச்சுவையோட நல்லா இருக்கு

குறட்டை விடுற நண்பரை விட்ராதீங்க...இப்போ அந்த சத்தத்துல தூங்கி பழகின உங்களுக்கு , இனிமே குறட்டை இல்லாம தூங்க கஷ்டமா இருக்கும்னு நினியாக்குறேன்

எல்லா டிகிரியும் வாங்கி எங்க வச்சுருக்கீங்க...குடுத்தா சூடா ஒரு டிகிரி காப்பி போட்டு குடிப்பேன்ல

 
On 17 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 11:05 , லவ்டேல் மேடி சொன்னது…

நெம்ப சந்தோசமுங்கோவ்......!! பெர்சனல் டேட்டா..... நெம்ப சூப்பர்.....!!

 
On 24 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:01 , நெல்லைத்தமிழ் சொன்னது…

மீரா சீயக்காய் தூள் போட்டு தலை குளித்த வாசனை//////

என் கண்ணுக்கு இதுதாங்க பட்டுது.. எனக்கு ஷாம்பு வாசனை தான் பிடிக்கும். அதிலும் குறிப்பா மல்லிகப்பூ வாசம் மனசை கவரும்.

 
On 24 மே, 2009 ’அன்று’ முற்பகல் 12:42 , நட்புடன் ஜமால் சொன்னது…

இரவீ எங்கே சென்றீர்கள்

கண நாட்கள் ஆகிவிட்டன போல் உள்ளது

விரைவில் பதிவிடுங்கள் ...

 
On 28 மே, 2009 ’அன்று’ முற்பகல் 9:57 , கலையரசன் சொன்னது…

வணக்கம், நானும் இன்னம்பிற பதிவர்களும், துபாய்ல பதிவர் சந்திப்பு போடலாமுன்னு இருக்கோம். நீங்க உங்க செல் நம்பர் கொடுத்தால் நன்று!


தயாராய் இருப்பவர்கள்...

குசும்பன்
சென்ஷி
வினோத் கெளதம் (ஜீலை காற்றில்)
செந்தில் வேலன் (செந்திலின் பக்கங்கள்)
வெங்கடேஷ் (கண்னா)
சுந்தர ராமன் (அது ஒரு கனா காலம்)
நானும், நீங்களும்...

என்னுடன் பேச 050 - 7174360
--
அன்புடன் கலையரசன்

 
On 1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 8:05 , கலையரசன் சொன்னது…

துபாய் பதிவர் சந்திப்பை பற்றி

http://venkatesh-kanna.blogspot.com/2009/06/5-2009.html

 
On 10 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 8:31 , Poornima Saravana kumar சொன்னது…

ரவீ எங்கே சென்றீர்கள்...
உங்கள் அடுத்த பதிவு??

 
On 22 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 10:09 , Anoch சொன்னது…

Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

 
On 29 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 7:11 , நட்புடன் ஜமால் சொன்னது…

எங்கே இரவீ

சில இடங்களில் பின்னூட்டம் மட்டும் பார்க்கிறேன்

சீக்கிரம் பதிவிடுங்கள்.