•1:10 AM
அழுத மனம் அடங்கி போனது
சந்தோசம் சம்பவிக்க சத்தியமா வாய்ப்பில்லை
இனிமை இருந்திருக்க இம்மி கூட வாய்ப்பில்லை
சோகத்தின் சுவடுகளும் சுற்றிலும் காணவில்லை
நெஞ்சு கனக்கிறது, என்ன வேதனை புரியவில்லை
இது வெறுமையின் உச்சமா இல்லை
வேதனையின் வெற்றிடமா.
சந்தோசம் சம்பவிக்க சத்தியமா வாய்ப்பில்லை
இனிமை இருந்திருக்க இம்மி கூட வாய்ப்பில்லை
சோகத்தின் சுவடுகளும் சுற்றிலும் காணவில்லை
நெஞ்சு கனக்கிறது, என்ன வேதனை புரியவில்லை
இது வெறுமையின் உச்சமா இல்லை
வேதனையின் வெற்றிடமா.
6 கருத்துகள்:
என்ன சோகம் சோகமா எழுதறீங்க? பிரச்சினைகள் அனைத்தும் நிரந்தரம் அல்ல. அவற்றை உடனுக்குடன் உதறிவிட்டு தலை நிமிர்ந்து முன்னே செல்லுங்கள்.
எனக்கு பிடித்த ஆங்கில Proverb
"Life is like an Icecream. Enjoy Before it melts"
வருகைக்கு நன்றி,
//பிரச்சினைகள் அனைத்தும் நிரந்தரம் அல்ல. அவற்றை உடனுக்குடன் உதறிவிட்டு தலை நிமிர்ந்து முன்னே செல்லுங்கள்.//
மாற்றம் என்னும் வார்த்தையை தவிர மாற்றம் இல்லாதது வேறில்லை -
என்பதே என் கருத்தும் - இருப்பினும்
நெஞ்சு மட்டும் கனக்கிறது, என்ன வேதனை புரியவில்லை
இது வெறுமையின் உச்சமா இல்லை
வேதனையின் வெற்றிடமா. - என்ற என் தேடல் மட்டும் தொடர்கிறது...
எனினும், தற்போது
விடையை விலக்கி விட்டு , விடியலுக்காக காத்திருக்கேன்.
தேடத்தேட இறுக்கம் அதிகரிக்குமே தவிர வேறு உபயம் தராது. எனவே, தேடுவதை விட்டுவிட்டு, உங்களுக்கு பிடித்தவைகளைச் செய்யுங்கள், கவனம் முழுவதையும் செலுத்துங்கள்.... விரைவில் கணம் காணமற்போகும்.
நன்றி குமார்.
இரவீ,இப்படியான உணர்வை நானும் அனுபவித்திருக்கிறேன்.தனிமைகூட ஒரு காரணம் இதற்கு.
உண்மை ஹேமா, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.