•1:17 AM
நிறைய எழுதனும்னு நினைப்பதோடு நின்றுவிடுவதால்
எழுதியது மிக மிக குறைவு .(அதாவது ஒன்னும் இல்லைனு வச்சுக்குங்க).
நிறைய பதிவுகளை படிக்கும் போது
மனது கேரட் தோட்டத்தில் புகுந்த முயலைபோல்
குதித்து குதூகலிப்பது உண்டு ..
நோகாமல் நோம்பு இருந்து பழகியதால் ... படிப்பதில் உள்ள நாட்டம் எழுத்தில் இல்லை.
இனியும் விழித்திடில்
இதயம் வெடித்திடும்
அப்டின்னு வீர முழக்கம் செய்து எழுத ஆசை ...
என் சோம்பேறி தனத்தை நினைவு கூர்ந்து,
(அடக்கமாக )- "இனியாவது தொடர்ந்து எழுத முனைகிறேன்".
4 கருத்துகள்:
என்ன ரவி, நீங்களும் ஒரு பதிவர்னு சொல்லவே இல்லை?
ம்ம்ம்.... நோகாம நோம்பி கும்பிட்டது போதும்.
எழுதும்..! எழுதித்தள்ளும்..!!
கருத்திற்கு நான்றி குமார் !!!
கனியான கருத்துக்கள்
கடைபரப்பி காத்திருக்க
என்னுமோ மனம் - என் பதிவை மனத்திருத்தி.
(சுவை கண்ட பூனை ... )
இரவீ,நீங்களே உங்களை கோபக்காரர் என்று ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதுவும்,அதாவது ஒத்துக்கொள்வது பாராட்டத் தக்கது.கோபக்காரர்களுக்கு பொறுமை குறைவாம்.கோபத்தைக் குறையுங்கள்.நிறைய எழுதுவீர்கள்.வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி ஹேமா,
பொருமைனா என்ன? என்று கேட்டவன் தான் நான் - அதுமட்டுமல்ல
கோபம் - பொருமைஇன்மையால் நிறைய பெற்றும் இழந்தும் இருக்கின்றேன்.
எழுத்து - கருத்து பகிர்வு இதற்கு சரியான வடிகால் என நினைக்கின்றேன்.