Author: - இரவீ -
•9:06 PM
ஹேமாவின் பட்டாம்பூச்சி

கதை - கவிதை, வார்த்தை லாவகம், ஓரங்கம் என்று விருப்பமான விஷயங்கள் நிறைய இருந்தும், அனைத்தையும் படிப்பதோடு நிறுத்திஇருந்தேன் (என் தொண்டையை அடைக்கும் பின்னூட்டத்தை கூட போடாமல் வந்திருக்கேன் தெரியுமா?)- காரணம் இலக்கண பிழையுடன் எழுத மனமில்லை. விலக விலக - இடைவெளி அதிகமானதே தவிர - இணக்கம் ஏற்படவில்லை.

தமிழை கொலை செய்வதை விட - நம்மை அடிமை படுத்திய ஆங்கிலவனின் ஆங்கிலத்தை கொடுமை படுத்துவோம் என்று ஏப்ரல் மாதத்தில் ரகசியமாக (அப்படி நெனச்சுகிட்டு) ஒரு பதிவு, பின் மே மதம் ஒன்று என இரு பதிவுகளை பதிவேற்றினேன். சில நாட்களுக்கு பின்பு அதை படித்தபோது என் பழிவாங்கும் மனோரதம் நிறைவேறிஇருப்பது கண்டு - தொகுப்பில் இருந்த என் ஆங்கில பதிவை கூட பதிய மணமில்லை.

எங்கயோ இருக்கும் காதலிக்கு ஆபத்து என்றதும் - கண்னிமைக்கும் பொழுதில் காப்பாத்தும் நம் தமிழ் சினிமா காதலன் போல, என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் உதவிய என் நண்பர்களை இங்கு நினைவு கூர்வது தகும், ஏனெனில் இங்கு என் பதிவை தொடர வைத்ததும் என் நண்பரில் ஒருவர் - அவர் வேறுயாருமல்ல 'கணினி தேசமே' (யாரு இவனையெல்லாம் எழுதவிட்டதுனு - முனு முனுத்துகிட்டு இருக்குறவுங்க 'கணினி தேசத்தை" போட்டு தாக்குங்க).

"சம்மட்டி அடிவாங்கும் இரும்பே, கூரிய வாளாக வடிவெடுக்கும்" என மனதை தேற்றிக்கொண்டு - மனதை கழற்றி உலர்த்தும் ஓர் உந்துதலாக கண்டுகொண்டேன் இந்த பதிவுலகை. எனது மிக சாதாரண இடுகைக்கு கிடைத்த பின்னூட்டம் உங்களின் அசாதாரண பாராட்டும் குணம் என்றாலும் - எனக்கு மிகுந்த ஊக்கம் கிடைத்தது - (குறிப்பாக அதிரை ஜமால், ஹேமா மற்றும் பூர்ணிமா). என்னை கையில் சாட்டையுடன் பின் தொடரும் பதிவர்களுக்கும், சத்தம் (பின்னூட்டம்) போட்டும் போடாமல் தாக்கும் சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றி.

பாராட்டுமட்டும் சொல்லிவிட்டு செல்லாமல் - என் எழுத்தின் தரவுயர்வில் கவனம் செலுத்த ஊக்குவிக்கும் ஹேமா போன்ற பதிவர்கள் - என்னை போன்ற பதிவர்களின் அதிஷ்ட ஆசான்கள். இன்று ஹேமா கொடுத்த 'பட்டாம்பூச்சி விருது' என்னை ஊக்குவிக்க நினைத்த அவரின் பெருந்தன்மையை காட்டினாலும், எனக்கு பிடித்த பதிவர்களுக்கு இதை பகிர்ந்து கொடுக்க தகுதி அடைந்ததில் மிக பெருமை எனக்கு. மனமார்ந்த நன்றி ஹேமா.

பகிர்தல் மூன்று பேருக்கு மட்டுமெனில், என் பட்டாம்பூச்சியின் -குளோனிங்கில் உருவான மூன்று கொழுத்த பட்டாம்பூச்சிகளை கீழே உள்ளவர்களுக்கு பகிர்வதில் மகிழ்கின்றேன்.

என்னை ஊக்கப்படுத்தி - உந்துதலாய் இருந்த "கணினி தேசம்" குமார் அவர்களுக்கு ,

காதலில் கசிந்துருகும் "நான் எழுத நினைப்பதெல்லாம்...." மதுவிற்க்கு

பின்னூட்டமிடாமல் திரும்ப திரும்ப நான் சென்று படிக்கும் "கவிதைச் சோலை..." திவ்யாவிற்கும்.


குறிப்போ, வரைமுறையோ இல்லை எனில் கிழே உள்ள அனைவருக்கும் எனது சிறப்பு பட்டங்கள் ...

"சந்தோஷி" - கணினி தேசம்.
"சுட்டெறிக்கும் நிலா" - வானம் வெளித்த பின்னும்.
"உங்களில் ஒருவன்" - வால் பையன்
"பதிவு புயல்" - பரிசல்காரன்.
"காதல் மன்னன்" - வானம் உன் வசப்படும்.
"பின்னூட்ட சூறாவளி" - கற்போம் வாருங்கள்
"பிரியமான தோழி" - Pravagam
"சபாஷ்" - Surveyசன் -ஆக்கியவன் அல்ல அ...
"அசத்தல் பதிவர்" - அதிஷா
'சிந்தனை சிற்பி" - கொங்கொங் ஈழவன்
"பூந்தென்றல்" - சாரல்.
"காதல் இளவரசி" - நான் எழுத நினைப்பதெல்லாம்...
"தமிழ் தாய்" - மழை
"ராஜாதிராஜா" - ராஜா சந்திரசேகர் கவிதைகள்
"அசத்தல்" - அனுஜன்யா

இவர்களின் பதிவுப்பாதைக்கு - எனது விவரப்பகுதியில் உள்ள '//Blogs I Follow//' தொகுப்பை பார்க்கவும்.


மீண்டும் ஒருமுறை நன்றி ஹேமா.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
|
This entry was posted on 9:06 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

29 கருத்துகள்:

On 1 ஜனவரி, 2009 அன்று 6:14 AM , ஹேமா சொன்னது…

இரவீ,இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் பட்டாம்பூச்சி வாழ்த்துக்களும் கூட.அழகான பதிவு இரவீ.இந்தப் பதிவில்கூட சின்னச்
சின்னப் பிழைகள் இருந்தாலும்கூட நிறையவே அழகு தெரிகிறது.இன்னும் இன்னும் உங்களைப் புரிந்து தெரிந்துகொண்டு வளருங்கள்.
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள் இரவீ.
உங்களை நீங்களே உணர்ந்திருக்கிற
படியால் உங்கள் வளர்ச்சிக்குத் தடையே இல்லை.

 
On 1 ஜனவரி, 2009 அன்று 6:44 AM , - இரவீ - சொன்னது…

மிக்க நன்றி ஹேமா,
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் நீங்கள் விரும்பும் அனைத்து நலனும், பலனும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள்.
எனக்கு பட்டாம்பூச்சி புடிச்சிகுடுத்ததால இந்த வருடம் உங்களுக்கு ஒரு சலுகை கொடுக்கலாம்னு நினைக்கிறேன், பத்து சந்தோஷ பதிவிற்க்கு ஒரு சோக பதிவுசெய்ய அனுமதி (10:1 அந்த ஒன்றையும் தவிர்த்தால் - உங்களுக்கு சங்கம் அமைத்து சந்தோஷத்தை கொண்டாடுறோம்).

 
On 1 ஜனவரி, 2009 அன்று 8:27 AM , G3 சொன்னது…

:))))

//"பிரியமான தோழி" - Pravagam//

Thanyanaanaen :) Nandri ravee :D

Ungalukkum iniya puththaandu vaazhthukkal :) Keep smiling and let the smiles spread :D

 
On 1 ஜனவரி, 2009 அன்று 1:50 PM , கணினி தேசம் சொன்னது…

விருது வாங்கியதுக்கு "ட்ரீட்" கேற்கலாம் என இருந்தேன்..

வாங்கிய விருதையே பகிர்ந்து கொடுத்து வாயடைத்து விட்டீரே!!

விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 
On 1 ஜனவரி, 2009 அன்று 1:52 PM , கணினி தேசம் சொன்னது…

//.ஏனெனில் இங்கு என் பதிவை தொடர வைத்ததும் என் நண்பரில் ஒருவர் - அவர் வேறுயாருமல்ல 'கணினி தேசமே' //

எதோ நம்மால முடிஞ்சது...

 
On 1 ஜனவரி, 2009 அன்று 1:57 PM , கணினி தேசம் சொன்னது…

//"சந்தோஷி" - கணினி தேசம்.//

சந்தோசம் ;-)))

 
On 1 ஜனவரி, 2009 அன்று 4:22 PM , ஹேமா சொன்னது…

இரவீ,நடக்கிற காரியமா இது?முயற்சி செய்து பல தடவைகள் தோற்ற விஷயம்.இனியும் முயற்சிக்கிறேன்.
நான்,நாடு,வீடு,உறவு,சமூகம் எங்குமே!

 
On 2 ஜனவரி, 2009 அன்று 2:37 AM , - இரவீ - சொன்னது…

மிக்க மகிழ்ச்சி G3 ... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
On 2 ஜனவரி, 2009 அன்று 2:37 AM , - இரவீ - சொன்னது…

//கணினி தேசம் said...

விருது வாங்கியதுக்கு "ட்ரீட்" கேற்கலாம் என இருந்தேன்..

வாங்கிய விருதையே பகிர்ந்து கொடுத்து வாயடைத்து விட்டீரே!!//

இப்படி சொன்ன விட்டுடுவேனா என்ன ?

 
On 2 ஜனவரி, 2009 அன்று 2:37 AM , - இரவீ - சொன்னது…

///கணினி தேசம் said...

//.ஏனெனில் இங்கு என் பதிவை தொடர வைத்ததும் என் நண்பரில் ஒருவர் - அவர் வேறுயாருமல்ல 'கணினி தேசமே' //

எதோ நம்மால முடிஞ்சது...///
நீங்க அண்ணம் போங்க, (பின்விளைவை யோசிக்காம சொல்லிட்டீங்களோ!!!)

 
On 2 ஜனவரி, 2009 அன்று 2:38 AM , - இரவீ - சொன்னது…

///கணினி தேசம் said...

//"சந்தோஷி" - கணினி தேசம்.//

சந்தோசம் ;-)))///

இதுக்கு ... இதுக்கு தான் உங்களுக்கு இந்த அடைமொழி.

 
On 2 ஜனவரி, 2009 அன்று 2:38 AM , - இரவீ - சொன்னது…

ஹேமா, அது என்னமோ தெரியல - நான் ஆசைப்பட்டா நடந்துவிடும் - நீங்க வேண்டுமென்றால் பாருங்க - இந்தவருடம் எவ்வளவு சந்தோஷ பதிவுகள் எழுதி குவிக்கப்போகின்றீர் என்று.

 
On 2 ஜனவரி, 2009 அன்று 5:06 AM , Divya சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரவீ!!!

 
On 2 ஜனவரி, 2009 அன்று 5:07 AM , Divya சொன்னது…

விருது கொடுத்து உற்சாகப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!!!!

 
On 2 ஜனவரி, 2009 அன்று 5:09 AM , Divya சொன்னது…

\\பின்னூட்டமிடாமல் திரும்ப திரும்ப நான் சென்று படிக்கும் "கவிதைச் சோலை..." திவ்யாவிற்கும்.\\\

ஹா ஹா....பின்னூட்டம் போட்டுட்டு தான் படிக்கனும்னு இனிமே புது சட்டம் போடலாம்னு இருக்கிறேன்:))

just kidding Ravee:))

 
On 2 ஜனவரி, 2009 அன்று 5:11 PM , - இரவீ - சொன்னது…

//Divya said...

விருது கொடுத்து உற்சாகப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!!!!//

உங்க ஒவ்வொரு கவிதைக்குமே தனி தனியா விருது கொடுக்கலாம் - அவ்வளவு அருமை.

 
On 2 ஜனவரி, 2009 அன்று 5:11 PM , - இரவீ - சொன்னது…

//ஹா ஹா....பின்னூட்டம் போட்டுட்டு தான் படிக்கனும்னு இனிமே புது சட்டம் போடலாம்னு இருக்கிறேன்//

வேணும்னா ஒரு குறிப்பு போடுங்க பின்வருமாதிரி : "கவிதையை படித்து சுயநினைவு இழக்கும் முன் - பின்னூட்டம் இட்டுச்செல்லவும்" னு.

 
On 2 ஜனவரி, 2009 அன்று 5:12 PM , - இரவீ - சொன்னது…

//Divya said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரவீ!!!
//

நன்றி திவ்யா, உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
On 2 ஜனவரி, 2009 அன்று 7:48 PM , பெயரில்லா சொன்னது…

விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 
On 2 ஜனவரி, 2009 அன்று 9:08 PM , வால்பையன் சொன்னது…

எனக்கு நீங்கள் அளித்திருக்கும் சிறப்பு பெயருக்கு ஆயிரம் நன்றிகள் சொல்ல கடமை பட்டுள்ளேன்

 
On 2 ஜனவரி, 2009 அன்று 10:08 PM , - இரவீ - சொன்னது…

//கடையம் ஆனந்த் said...

விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

நன்றி ஆனந்த், உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
On 2 ஜனவரி, 2009 அன்று 10:08 PM , - இரவீ - சொன்னது…

//வால்பையன் said...

எனக்கு நீங்கள் அளித்திருக்கும் சிறப்பு பெயருக்கு ஆயிரம் நன்றிகள் சொல்ல கடமை பட்டுள்ளேன்//

நான் நினைக்கும் கருத்துக்களை பலமுறை உங்கள் பதிவாகவும் - பின்னூட்டங்களாகவும் கொடுத்த உங்களுக்கு நன்றி சொல்ல நான்தான் கடமைபட்டுள்ளேன்.

 
On 3 ஜனவரி, 2009 அன்று 8:32 PM , Mathu சொன்னது…

ரவீ...விருது தந்தமைக்கு ரொம்ப நன்றி :) காதல் இளவரசின்னு எல்லாம் பட்டம் குடுத்திருக்கீங்க. புல்லரிக்குது :) Hehe!

Sorry I am late. I have just seen ur post. Thanks very much :)

 
On 3 ஜனவரி, 2009 அன்று 8:45 PM , - இரவீ - சொன்னது…

மது, உங்களுடைய 'காதல் நிரபராதி' கவிதைக்கே பத்து விருதுகள் குடுக்கலாம்,
தொடர்ந்து கலக்குங்க - வாழ்த்துக்கள்.

 
On 4 ஜனவரி, 2009 அன்று 7:05 AM , நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்த்தியவருக்கும்

வாழ்த்து பெற்றவருக்கும்

வாழ்த்துக்கள்

(செல்லாது செல்லாது ரொம்ப லேட்)

 
On 4 ஜனவரி, 2009 அன்று 10:38 PM , - இரவீ - சொன்னது…

அதிரை எப்ப வந்தாலும் செல்லும்,
நன்றி அதிரை.

 
On 5 ஜனவரி, 2009 அன்று 9:33 AM , புதியவன் சொன்னது…

வாழ்த்துக்கள் இரவீ

//”காதல் மன்னன்" - வானம் உன் வசப்படும்.//

புதியவனுக்கு புதிய பட்டமா...
நன்றி இரவீ...

 
On 5 ஜனவரி, 2009 அன்று 11:29 AM , - இரவீ - சொன்னது…

நன்றி புதியவன்,
உங்க முத்த (மொத்த அல்ல) கவிதைக்கே இந்த பட்டம் பத்தாது... அடுத்த முத்தம் எப்போது?

 
On 20 மார்ச், 2009 அன்று 4:00 PM , ஆதவன் சொன்னது…

hi.your artilce really nice.. please check thamizhstudio.com.. there is no link.. please give link.

thanks,
chuttiarun