Author: - இரவீ -
•AM 1:50
அன்று கிராமத்தில் இருக்கும் போது நகரத்தின் மீது வியப்பு,
இன்று நகரத்தில் இருக்கும் போது கிராமத்தின் மீது காதல்,
அன்று அலுத்து போகும் அம்மாவின் அளவுக்கதிக சாப்பாடு,
இன்று வெறுத்து போகும் இந்த அளவுகெட்ட சொந்த சாப்பாடு.
அன்று தினமும் தகராறு பக்கத்தில் இருக்கும் சகோதரியுடன்,
இன்று தினமும் வரலாறு தூரத்தில் இருக்கும் அவளைப்பற்றி,
அன்று வீட்டில் இருக்கும் போது விடுதியின் கண்ட விடுதலை,
இன்று விடுதியில் இருக்கும் போது வீட்டின் கண்ட விருப்பங்கள்,

வெய்யலில் குளிரும், குளிரில் வெய்யலும் விருப்பமாய்.. அன்றும் இன்றும்.
|
This entry was posted on AM 1:50 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

42 கருத்துகள்:

On 8 ஜனவரி, 2009 அன்று AM 2:33 , ஹேமா சொன்னது…

இரவீ,ஊருக்குப் போற ஞாபகம் வந்தாச்சா!இக்கரைக்கு அக்கரை பச்சைதான் எப்போதும்.

இதையும் திருப்பிப் படிக்க வேண்டியதில்லைதானே!நல்லாவே குழப்பிட்டீங்கா.ஆனந்த்க்கு இன்னும் தெளியல.

 
On 8 ஜனவரி, 2009 அன்று AM 5:30 , நட்புடன் ஜமால் சொன்னது…

அன்றும்

இன்றும்

நல்லாருக்கு

 
On 8 ஜனவரி, 2009 அன்று AM 8:00 , கணினி தேசம் சொன்னது…

அருகில் இருக்கும் பொருளின் மதிப்பு, அது இல்லாதபோதுதான் தெரியும் என்பார்கள்.

 
On 8 ஜனவரி, 2009 அன்று AM 8:02 , கணினி தேசம் சொன்னது…

//இன்று வெறுத்து போகும் இந்த அளவுகெட்ட சொந்த சாப்பாடு.//
நீங்க நல்லாதானே சமைக்கறீங்க!
உண்மைய சொல்லுங்க "சமைக்கறதுல வெறுப்பா" இல்லை சாப்பிடும்போது வெறுப்பா" ??

 
On 8 ஜனவரி, 2009 அன்று AM 8:03 , கணினி தேசம் சொன்னது…

//வெய்யலில் குளிரும், குளிரில் வெய்யலும் விருப்பமாய்.. அன்றும் இன்றும்.//

அப்ப பகலில் இரவையும், இரவில் பகலையும் விரும்புவீரோ?

 
On 8 ஜனவரி, 2009 அன்று AM 8:04 , கணினி தேசம் சொன்னது…

மொத்தத்தில் நல்ல பதிவு.
நன்றி

 
On 8 ஜனவரி, 2009 அன்று AM 8:16 , G3 சொன்னது…

//இக்கரைக்கு அக்கரை பச்சைதான் எப்போதும்.//

Naan solla vandhadha hema erkanavae sollitaanga.. so avanga commentukku oru periya...

Repeatae :)))))

 
On 8 ஜனவரி, 2009 அன்று AM 9:32 , அ.மு.செய்யது சொன்னது…

நல்ல கொசுவத்தி சுத்திய பதிவு....

shore and sweet RAVEE....!!!!!

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 3:12 , - இரவீ - சொன்னது…

நன்றி ஹேமா, பிரயாணத்துக்கான மணித்துளிகளை எண்ணியபடி :)
வேணாம் வேணாம் ... திருப்பியெல்லாம் படிக்காதீங்க ... ஆனந்த் உங்களுக்கும் தான் ... இந்த பதிவ நேரா படிக்கவும் :)

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 3:12 , - இரவீ - சொன்னது…

மிக்க நன்றி ஜமால்.

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 3:15 , - இரவீ - சொன்னது…

//கணினி தேசம் said...
அருகில் இருக்கும் பொருளின் மதிப்பு, அது இல்லாதபோதுதான் தெரியும் என்பார்கள்.//

புரிஞ்சா பரவால்ல - கஷ்டமாள்ள இருக்கு.

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 3:16 , - இரவீ - சொன்னது…

//நீங்க நல்லாதானே சமைக்கறீங்க!
உண்மைய சொல்லுங்க "சமைக்கறதுல வெறுப்பா" இல்லை சாப்பிடும்போது வெறுப்பா" ??//
நான் சமச்சதை நானே சாப்பிடும்போது :)

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 3:20 , - இரவீ - சொன்னது…

//அப்ப பகலில் இரவையும், இரவில் பகலையும் விரும்புவீரோ?//
அதில் என்ன சந்தேகம், பகலில் எப்ப தூங்க போலாம்னு நெனப்பு - இரவில் அடுத்த பகலை பற்றிய கனவு ... சரிதானே?

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 3:21 , - இரவீ - சொன்னது…

//கணினி தேசம் said...
மொத்தத்தில் நல்ல பதிவு.
நன்றி//
நன்றி நன்றி மிக்க நன்றி.

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 3:27 , - இரவீ - சொன்னது…

G3, இந்த போங்கு ஆட்டமெல்லாம் வேணாம்,
இக்கரை பச்சயா? அக்கர பச்சயா? இல்ல எக்கர பச்ச???

என்ன ஹேமா, போதுமா இல்ல இன்னும் கேள்வி கேக்கனுமா ???

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 3:30 , - இரவீ - சொன்னது…

//அ.மு.செய்யது said...
நல்ல கொசுவத்தி சுத்திய பதிவு....

shore and sweet RAVEE....!!!!!//

நன்றி செய்யது ...

You comment too Chooo sweet ;)

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 6:18 , வால்பையன் சொன்னது…

//இன்று வெறுத்து போகும் இந்த அளவுகெட்ட சொந்த சாப்பாடு.//

இதோட நிறுத்திகோங்க!
நாளைக்கு வெறுத்து போன பொண்டாட்டி சாப்பாடுன்னு எழுதி வருங்கால சாப்பாட்டுக்கு வேட்டு வச்சிக்காதிங்க

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 6:19 , வால்பையன் சொன்னது…

//வெய்யலில் குளிரும், குளிரில் வெய்யலும் விருப்பமாய்.. அன்றும் இன்றும்.//

இது தான் வாழ்க்கை
இரவும் பகலும் மாறி மாறி வரத்தான் செய்யும்

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 6:43 , G3 சொன்னது…

//G3, இந்த போங்கு ஆட்டமெல்லாம் வேணாம், //

aaatamnu irundha adhula bongu pannaama irukka mudiyuma? ippadi edhaavadhu panna thaanae aatam swarasyamaagum :)

//இக்கரை பச்சயா? அக்கர பச்சயா? இல்ல எக்கர பச்ச???//

Ikkaraila irukkum bodhu akkarai pachai.. akkaraila irukkumbodhu ikkarai pachai..

simplea sollanumna pachai colour kannadi pottutu paarunga.. ella karaiyum pachaiya theriyum :P

//என்ன ஹேமா, போதுமா இல்ல இன்னும் கேள்வி கேக்கனுமா ???//

Badhila kettu tension aagamaateenganna evlo kelvi venaalum kekkalaam.. naangalum salaikkaama badhil solvomilla :P

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 7:19 , - இரவீ - சொன்னது…

//வால்பையன் said... இதோட நிறுத்திகோங்க!
நாளைக்கு வெறுத்து போன பொண்டாட்டி சாப்பாடுன்னு எழுதி வருங்கால சாப்பாட்டுக்கு வேட்டு வச்சிக்காதிங்க//

நீங்க வேற ..நம்ம தொழில்பேட்டை போற போக்க பாத்தா நான் வீட்டோட மாப்ளயா போயிடலாமானு இருக்கேன் ... பொண்டாட்டிக்கு சமைச்சு போட்டு - குழந்தைய பாத்துக்கறது என்ன ஒரு சுகம் ...

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 7:19 , - இரவீ - சொன்னது…

//வால்பையன் said... இது தான் வாழ்க்கை
இரவும் பகலும் மாறி மாறி வரத்தான் செய்யும்//

இதுதாண்டா வாழ்க்கைன்னு - ஒரு தலைப்பு போட்டு - ராஜசேகருக்கு ஒரு கடிதம் எழுதுங்க ...

நன்றி அருண். வருகைக்கும் தருகைக்கும்.

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 7:19 , - இரவீ - சொன்னது…

//aaatamnu irundha adhula bongu pannaama irukka mudiyuma? ippadi edhaavadhu panna thaanae aatam swarasyamaagum :)//
ஆகா - கிளம்பிட்டாங்கையா ...

//Ikkaraila irukkum bodhu akkarai pachai.. akkaraila irukkumbodhu ikkarai pachai..

simplea sollanumna pachai colour kannadi pottutu paarunga.. ella karaiyum pachaiya theriyum//

இதுக்கு என்ன பச்ச பச்சயா திட்டியிருக்கலாம் .... சரி - அப்ப மூக்கு கண்ணாடி போட்டா எப்டி தெரியும் ?


//Badhila kettu tension aagamaateenganna evlo kelvi venaalum kekkalaam.. naangalum salaikkaama badhil solvomilla :P //
இந்த கும்மிய பாத்தா - அவங்க என் ப்லாக் பக்கமே இனி வரமாட்டாங்க (நல்லவேள - நம்ம லோக்கல் தமிழ் அவங்களுக்கு சரியா புரியாது)

 
On 8 ஜனவரி, 2009 அன்று PM 7:36 , G3 சொன்னது…

//இதுக்கு என்ன பச்ச பச்சயா திட்டியிருக்கலாம் .... சரி - அப்ப மூக்கு கண்ணாடி போட்டா எப்டி தெரியும் ? //

Kandippa mooku mooka theriyaadhungaradhu mattum urudhi :)

 
On 9 ஜனவரி, 2009 அன்று AM 12:46 , Mathu சொன்னது…

ரொம்ம்ப நல்லா இருக்கு கவிதை....இரவீ..

//வெய்யலில் குளிரும், குளிரில் வெய்யலும் விருப்பமாய்.. அன்றும் இன்றும்.//
இந்த வரி சுபெர்ப்....

உங்க ஊருக்கு ஒருக்கா போயிட்டு வர வேண்டியதுதானே :)

 
On 9 ஜனவரி, 2009 அன்று AM 4:19 , ஹேமா சொன்னது…

//வால்பையன் said... இதோட நிறுத்திகோங்க!
நாளைக்கு வெறுத்து போன பொண்டாட்டி சாப்பாடுன்னு எழுதி வருங்கால சாப்பாட்டுக்கு வேட்டு வச்சிக்காதிங்க//

ம்ம்ம்... சூப்பர் வால்பையன்.கொஞ்சம் புத்தி சொல்லுங்க இரவீக்கு.

//நீங்க வேற ..நம்ம தொழில்
பேட்டை போற போக்க பாத்தா நான் வீட்டோட மாப்ளயா போயிடலாமானு இருக்கேன் ... பொண்டாட்டிக்கு சமைச்சு போட்டு - குழந்தைய பாத்துக்கறது என்ன ஒரு சுகம் ...//

அபார திட்டம்.அமுலுக்கு வரட்டும்.இந்தத் திட்டம் சரிவந்தா எல்லாக் கரையும் எப்பவுமே பச்சைதான் இரவீ.

 
On 9 ஜனவரி, 2009 அன்று AM 4:20 , ஹேமா சொன்னது…

இந்தக் கவிதை என்னமோ நேராத்தான் இருக்கு....!ஆனா!

 
On 10 ஜனவரி, 2009 அன்று PM 1:22 , பெயரில்லா சொன்னது…

திருப்பியெல்லாம் படிக்காதீங்க ... ஆனந்த் உங்களுக்கும் தான் ... இந்த பதிவ நேரா படிக்கவும்.
//

ஹி...ஹி...ஹி. அப்படியே ஆகட்டும் ரவீ.
நல்ல பதிவு.
இன்னும் நிறைய பதிவு எழுதுங்க ரவீ. படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

 
On 12 ஜனவரி, 2009 அன்று PM 4:05 , Poornima Saravana kumar சொன்னது…

அன்றும் இன்றும்

என்றென்றும்!!!!!!!!!!

 
On 13 ஜனவரி, 2009 அன்று PM 4:40 , Focus Lanka சொன்னது…

Focus Lanka திரட்டியில் இணைக்க...

http://www.focuslanka.com

 
On 16 ஜனவரி, 2009 அன்று AM 8:55 , காரூரன் சொன்னது…

யதார்த்தம் நட்பே!, உனக்கு விரும்பினால் போய் பார்க்கலாம்.
எங்கள் நிலை விடியும் வரை கனவுகள் தான்.

 
On 17 ஜனவரி, 2009 அன்று AM 3:41 , Divya சொன்னது…

வாழ்க்கையின் யதார்த்தம்:))

கவிதை ரொம்ப அருமையா இருக்கு இரவீ:)

வாழ்த்துக்கள்!!!!

 
On 22 ஜனவரி, 2009 அன்று AM 6:22 , BOOPATHY சொன்னது…

நன்றாக உணர்ந்து கூறியிருக்கிறீர்கள் நான் சொல்லவந்ததை யாரோ சொன்னது போல் ஓர் சந்தோசம். நன்றிகள் பல

 
On 10 பிப்ரவரி, 2009 அன்று PM 12:10 , G3 சொன்னது…

Romba naala aala kaanum? enna aaneenga? eppadi irukkeenga?

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று PM 1:44 , - இரவீ - சொன்னது…

நன்றி மது,
// உங்க ஊருக்கு ஒருக்கா போயிட்டு வர வேண்டியதுதானே :)//
எனது விருப்பமான - உங்களது கட்டளை நிறைவேற்ற பட்டது.

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று PM 1:44 , - இரவீ - சொன்னது…

நன்றி ஹேமா - உண்மைய சொன்னா புத்தி இல்லேன்னு சொல்லுறீங்க...
// அபார திட்டம்.அமுலுக்கு வரட்டும்.இந்தத் திட்டம் சரிவந்தா எல்லாக் கரையும் எப்பவுமே பச்சைதான் இரவீ.//
என்ன ஒரு சந்தோசம் - இருக்கட்டும் ... இருக்கட்டும் :)

//இந்தக் கவிதை என்னமோ நேராத்தான் இருக்கு....!ஆனா!//
ஆனா சொன்னாலும், ஆவன்னா சொன்னாலும் நேராத்தான் இருக்கு.

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று PM 1:47 , - இரவீ - சொன்னது…

மிக்க நன்றி ஆனந்த்!!!

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று PM 1:47 , - இரவீ - சொன்னது…

மிக்க நன்றி பூரணி.

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று PM 1:47 , - இரவீ - சொன்னது…

காரூரன் - நீயும் நானும் வேறல்ல என் தாய்க்கு, தரம் கெட்ட அரசியல் (வியாதிகள்) வாதிகளை - தவிர - மக்கள் அனைவரும் உனக்காக சிந்திப்பதை நேரில் சென்று பார்த்ததில் ஒரு நிம்மதி எனக்கு.

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று PM 1:48 , - இரவீ - சொன்னது…

மிக்க நன்றி திவ்யா.

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று PM 1:48 , - இரவீ - சொன்னது…

நன்றி தேவா - நிட்சயம் வருவேன்!

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று PM 1:48 , - இரவீ - சொன்னது…

முதல் வருகைக்கும் - கனிவான கருத்துக்கும் நன்றி பூபதி.

 
On 13 பிப்ரவரி, 2009 அன்று PM 1:49 , - இரவீ - சொன்னது…

மிக்க நன்றி G3 ,
// Romba naala aala kaanum? //
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன் (சென்னைக்கு).
//enna aaneenga?//
சுகமான அலைதல் மற்றும் சுவையான உணவின் மயக்கத்தில் அயர்ந்துவிட்டேன்.
//eppadi irukkeenga?//
சகோதர துக்கத்தில் உயிர்துறந்த 'இரவி' நான் இல்லையே... என சோகத்தில் இருந்த என்னை, உங்கள் பாசமான கேள்விகள் மகிழ்சிக்குள்ளக்கியது.